இன்ஸ்டாவில் இணைந்த தளபதி விஜய்..! 'லியோ' லுக்கில் போட்ட முதல் போஸ்டே சும்மா அதிருதே.. வைரலாகும் புகைப்படம்!
தளபதி விஜய், ஏற்கனவே ட்விட்டர் பக்கத்தில் இருக்கும் நிலையில் தற்போது முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். மேலும் இவரின் முதல் போஸ்ட் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Vijay
தமிழ் திரையுலகில் லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும், டாப் நடிகர்களான அஜித் - விஜய் ஆகிய இருவருமே, சமூக வலைதளத்தில் அதிக ஈடுபாடு காட்டுவது இல்லை. பிரபல நடிகர் சூர்யா கூட கடந்த ஆண்டு தான், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த நிலையில், இவரை தொடர்ந்து நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார் என்பது, ப்ளூ டிக் மூலம் அதிகார பூர்வமாக தெரியவந்துள்ளது.
தளபதி விஜய் ஏற்கனவே ட்விட்டர் பக்கத்தில் இருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தற்போது instagram பக்கத்தில் இணைந்துள்ளார். மேலும் இவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள முதல் புகைப்படமே படு மாஸாக இருக்கிறது என ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இவர் இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கி சில நிமிடங்களே ஆகும் நிலையில், இதுவரை 433K ஃபாலோவர்ஸ் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
எனவே இனி விஜய் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் படங்களின் விவரத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'வாரிசு' திரைப்படம் வெளியானது. வம்சி இயக்கத்தில் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சுமார் 350 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்ததாக படக்குழு அதிகார பூர்வமாக தெரிவித்தது.
இதை தொடர்ந்து, தற்போது.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைத்துள்ள விஜய், 'லியோ' படத்தில் மிகவும் பரபரப்பாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த நிலையில், சமீபத்தில் தான் படக்குழு சென்னை திரும்பினர். இதை தொடர்ந்து விரைவில், சென்னையில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எடுக்க வாய்ப்புள்ளதாக, கூறப்படும் நிலையில் இதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த படத்தை செவென் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் பிரமன்னடமாக தயாரித்து வருகிறது.
அனிரூத் ரவிச்சந்திரன் லியோ படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும் இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், பிரியா ஆனந்த், கதிர், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.