கீர்த்தி சுரேஷ் - உதயநிதியுடன் பிறந்தநாள் கொண்டாடிய வைகை புயல் வடிவேலு.! வைரலாகும் போட்டோஸ்..!
காமெடி கிங் வைகை புயல் வடிவேலு இன்று தன்னுடைய 62 ஆவது பிறந்தநாளை 'மாமன்னன்' படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலக நடிகர்கள் மனதில், காமெடி அரசனாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும்... நடிகர் வடிவேலு இன்று தன்னுடைய 62 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இவருக்கு அனைத்து ரசிகர்களும், பல பிரபலங்களும் சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு, நாய் சேகர் ரிட்டர்ஸன் படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய வைகை புயல் இந்த ஆண்டு, உதயநிதி - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து வரும் 'மாமன்னன்' படக்குழுவினருடன், 62 ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
மேலும் செய்திகள்: என்னை மிரட்டி தான் விஜய் படத்துக்கு நடிக்க ஒத்துக்க வச்சாங்க..! ராதாரவி பேச்சால் பரபரப்பு..!
சேலத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ் குமரன் மற்றும் மாமன்னன் படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அனைவரும் தங்களது வாழ்த்துக்களை நடிகர் வடிவேலுவிற்கு தெரிவித்தனர்.
அதிலும் குறிப்பாக சந்திரமுகி 2, மட்டும் 'மாமன்னன்' ஆகிய படங்கள் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த படங்களில் மீண்டும் மீம்ஸ் மன்னன், வடிவேலுவின் வேற லெவல் காமெடியை கண்டுகளிக்க ரசிகர்கள் தயாராகிவிட்டனர் என்பது குறிபிடித்தக்கது.
மேலும் செய்திகள்: பிரபல நடிகையுடன் பள்ளிவிழாவில் கலந்து கொண்டு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்திகேயன்..!ஏன்..?