சிம்புவின் தந்தை டி.ஆரின் தாடிக்கு பின்னணியில் இருக்கும் லேடி யார் தெரியுமா? பிரபலம் மூலம் வெளிவந்த சீக்ரெட்
நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் எப்போதும் தாடியுடனே இருப்பதற்கு பின்னணியில் ஒரு லேடி இருப்பதாக அவரின் நண்பரும், நடிகருமான தியாகு தெரிவித்துள்ளார்.
நடிகர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருபவர் டி.ராஜேந்தர். 1980-களில் முன்னணி இயக்குனராக வலம் வந்த டி.ராஜேந்தர், ஒரு தலை ராகம், என் தங்கை கல்யாணி, ரயில் பயணங்களில், உயிருள்ளவரை உஷா போன்ற பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து நட்சத்திர இயக்குனராக வலம் வந்தார். குறிப்பாக இவர் படங்களில் ஆபாச காட்சிகள் எதுவும் இருக்காது இதனால் பேமிலி ஆடியன்ஸின் மனம்கவர்ந்த இயக்குனராகவும் டி.ஆர். விளங்கினார்.
டி.ராஜேந்தருக்கு உஷா என்கிற மனைவி உள்ளார். இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகனான சிம்பு இளம் வயதில் இருந்தே சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இரண்டாவது மகன் குரலரசன் இசையமைப்பாளராக சில படங்களில் பணியாற்றினார். அதன்பின் சினிமா செட் ஆகாததால் தற்போது சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார். சிம்புவின் தங்கை இலக்கியாவும் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார்.
இதையும் படியுங்கள்... ஃபாரின் மாப்பிள்ளை தான் வேண்டும் என அடம்பிடித்து திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகைகளின் லிஸ்ட் இதோ
இப்படி தமிழ் சினிமாவில் இன்று வரை ஆக்டிவாக இருந்து வரும் டி.ராஜேந்தர், எப்போதும் தாடி உடன் தான் காட்சியளிப்பார். அவரை தாடி இல்லாமல் பார்ப்பது அபூர்வம். அப்படி அந்த தாடியின் மீது அவருக்கு ஏன் அவ்வளவு பிரியம், அதை வளர்த்ததற்கான காரணம் என்ன என்பது புரியாத புதிராக இருந்தது. இந்நிலையில், டி.ராஜேந்தரின் நண்பரும், நடிகருமான தியாகு, டி.ஆரின் தாடிக்கு பின்னணியில் ஒரு லேடி இருப்பதாக கூறி இருக்கிறார்.
பேட்டி ஒன்றில் இதுகுறித்து அவர் கூறுகையில், டி.ஆர். தாடி வளர்க்க காதல் தோல்வி தான் காரணம் என கூறி இருக்கிறார். அவர் உஷா என்கிற பெண்ணை காதலித்தார். இருவரும் ஒரே தெரு தான். இவர்களது காதலுக்கு வீட்ல சம்மதிக்கல. அதனால் பிரிந்துவிட்டார்கள். அந்த காதல் தோல்வியால் தான் அவர் இன்று வரை தாடி வைத்துக் கொண்டிருக்கிறார் என தியாகு கூறி உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் டி.ஆரின் தாடிக்கு பின்னணியில் இப்படி ஒரு சோகக்கதை இருக்கா என ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சமூக நலம் காக்க "1 கோடி கையெழுத்து இயக்கம்".. சூப்பர் ஸ்டார் வரிசையில் சைன் போட்டு ஆதரித்த சூர்யா!