MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஃபாரின் மாப்பிள்ளை தான் வேண்டும் என அடம்பிடித்து திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகைகளின் லிஸ்ட் இதோ

ஃபாரின் மாப்பிள்ளை தான் வேண்டும் என அடம்பிடித்து திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகைகளின் லிஸ்ட் இதோ

தமிழ் படங்களில் நடித்த நடிகைகள் சிலர் வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டுள்ளனர். அவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 16 2023, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண்

தமிழில் ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா. இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ராதா என்கிற பெண் குழந்தையும் உள்ளது.

25
பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று அங்கு முன்னணி நடிகையான இவர், தற்போது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். நடிகை பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் என்கிற அமெரிக்க பாடகரை கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரியங்காவை விட நிக் 10 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

35
ராதிகா

ராதிகா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ராதிகா. இவர் முதலாவதாக பிரதாப் போத்தனை திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஒரே ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதையடுத்து இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை இரண்டாவதாக கரம்பிடித்தார் ராதிகா. இவரை திருமணம் செய்த இரண்டே ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார் ராதிகா. இந்த ஜோடிக்கு ரயானே என்கிற மகளும் உள்ளது. இதன் பின்னரே சரத்குமாரை மூன்றாவதாக மணமுடித்தார் ராதிகா.

இதையும் படியுங்கள்... எப்பவுமே கரண்ட் கட் பண்ணா எப்படி? டுவிட்டரில் புலம்பிய இர்பான் - அமைச்சரிடம் இருந்து வந்த உடனடி ரிப்ளை

45
ரிச்சா கங்கோபத்யா

ரிச்சா கங்கோபத்யா

தனுஷின் மயக்கம் என்ன, சிம்பு உடன் ஒஸ்தி என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும், மக்களின் மனதில் இடம்பிடித்த கதாநாயகியாக வலம் வந்தவர் தான் ரிச்சா கங்கோபத்யா. படிப்பதற்காக சினிமாவை விட்டு விலகிய இவர், வெளிநாட்டில் படிக்கும் போது ஜோ லாங்கெல்லா என்பவரை காதலித்து கடந்த 2019-ம் ஆண்டு அவரை கரம்பிடித்தார்.

55
ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

தமிழில் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் தான் ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் லண்டனை சேர்ந்த டெயிலர் என்பவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு அவரையே திருமணமும் செய்துகொண்டார்.

இதையும் படியுங்கள்... சமூக நலம் காக்க "1 கோடி கையெழுத்து இயக்கம்".. சூப்பர் ஸ்டார் வரிசையில் சைன் போட்டு ஆதரித்த சூர்யா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டூ நேஷனல் அவார்டு வின்னர்! அஜித்திற்கும் பிரபுதேவாவிற்கும் குரல் கொடுத்த விக்ரம் - திரைக்குப் பின்னால் இருந்த 10 ஆண்டு போராட்டம்!
Recommended image2
வாழ்க்கையா? பணமா? காதல் கோட்டை படத்திற்காக அஜித் செய்த அந்தப் பெரிய தியாகம்.. இன்று வரை யாருக்கும் தெரியாத உண்மை!
Recommended image3
டான் 3 சர்ச்சை: ரன்வீர் சிங் 40 கோடி கொடுப்பாரா? அல்லது ஃபர்ஹான் அக்தர் கோர்ட்டுக்கு செல்வாரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved