எப்பவுமே கரண்ட் கட் பண்ணா எப்படி? டுவிட்டரில் புலம்பிய இர்பான் - அமைச்சரிடம் இருந்து வந்த உடனடி ரிப்ளை
பிரபல யூடியூபரான இர்பான், தனது ஏரியாவில் கரண்ட் அடிக்கடி கட் ஆனது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட நிலையில், அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு ரிப்ளை செய்துள்ளார்.
திமுக இதற்கு முன் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் மின் தடை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. அந்த சமயத்தில் தினசரி மின் தடை செய்யப்பட்டதே அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு ஒரு முக்கிய காரணம். இதையடுத்து 10 ஆண்டுகள் கழித்து கடந்த 2021-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியில் அமர்ந்த திமுக, செந்தில் பாலாஜியை மின்சாரத்துறை அமைச்சராக நியமனம் செய்திருந்தது.
கடந்த அதிமுக ஆட்சியை காட்டிலும், திமுக ஆட்சிக்கு வந்த பின் அதிகளவில் மின் தடை ஏற்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு அனைவரும் வியக்கும் அளவுக்கு ஒரு பதிலை அளித்திருந்தார் செந்தில் பாலாஜி, அது என்னவென்றால், அணில்களால் தான் மின் தடை ஏற்படுவதாக கூறி இருந்தார். இதையடுத்து அவரை மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர்.
இதையும் படியுங்கள்... சிம்புவின் மாநாடு.. ரீமேக் ரைட்ஸை வாங்கிய "பல்வாள்தேவன்" - ஹிந்தியில் அவரை வைத்து எடுக்கப்போறாராம்!
தற்போது செந்தில் பாலாஜி ரைடில் சிக்கியதால், அவரது மின்சாரத்துறை பதவியை தங்கம் தென்னரசு கவனித்து வருகிறார். இந்நிலையில், பிரபல யூடியூப்பரான இர்பான், நேற்று மின்வாரிய டுவிட்டர் பக்கத்தை டேக் செய்து ஒரு பதிவை போட்டிருந்தார். அதில், கரண்ட் எப்பவாது கட் பண்ணலாம், எப்பவுமே கட் பண்ணா எப்படி? நேத்து முழுவதும், இன்னைக்கு 2 மணிநேரமா கரெண்ட் இல்ல. கால் பண்ணினாலும் செக் பண்ண மாட்டிங்கிராங்க. சித்தலப்பாக்கம் அல்லது பெரும்பாக்கத்துல யாராச்சும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டீர்களா என கேட்டு பதிவிட்டு இருந்தார்.
இர்பானின் இந்த டுவிட் வைரலானதை அடுத்து அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு ரிப்ளை செய்துள்ளார். அதில், பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. எதுவாக இருந்தாலும், தொடர்ந்து மின்சாரம் வழங்குவதை நிறுத்த வேண்டாம் என்று எனது அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியதோடு, தடையின்றி மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் கூறினேன். நாளை நானே நேரில் சென்று ஆய்வு செய்கிறேன். இதை என் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... கொரியன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து.. மசாலா சேர்த்து எடுக்கப்பட்ட கிரிஞ் படம் - மாவீரனை விளாசிய ப்ளூ சட்டை