சிம்புவின் மாநாடு.. ரீமேக் ரைட்ஸை வாங்கிய "பல்வாள்தேவன்" - ஹிந்தியில் அவரை வைத்து எடுக்கப்போறாராம்!
இந்த படத்திற்கான ரீமேக் உரிமத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ராணா தகுபதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிம்புவின் கால்ஷீட் பிரச்சினைக்காக பெரிய அளவில் பேசப்பட்ட ஒரு திரைப்படம் தான் மாநாடு. கடந்த 2018ம் ஆண்டு இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் படப்பிடிப்புக்கு நேரத்திற்கு சிம்பு வருவதில்லை என்று பல புகார்கள் எழுந்த நிலையில் சிம்பு இந்த படத்தில் இருந்து வெளியேறினார்.
அதன் பிறகு சுமார் ஒரு வருட காலத்திற்குப் பிறகு சமாதானமான சிம்பு மீண்டும் மாநாடு படத்தில் நடிக்க துவங்கினார். இருப்பினும் படத்திற்கான வேலைகள் பெருந்தொற்று காரணமாக மீண்டும் தாமதமானது. பாண்டிச்சேரி, ஏற்காடு, ஓசூர் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு பணிகள் அவ்வப்போது நடந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி இறுதியாக இந்த திரைப்படம் வெளியானது. தளபதி விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே சூர்யா, உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். விமர்சனம் ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை இந்த திரைப்படம் பெற்றது.
சுமார் 115 கோடி பாக்ஸ் ஆபிஸ் வெற்றியும் இந்த திரைப்படம் பெற்றது, இந்நிலையில் தற்பொழுது இந்த படத்திற்கான ரீமேக் உரிமத்தை பிரபல நடிகரும் இணை தயாரிப்பாளருமான ராணா தகுபதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த உரிமத்தை கொண்டு, அவர் மாநாடு படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவானை நடிக்க வைக்க ராணா முயற்சித்து வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றது.
எல்லாம் உனக்காக சகோ.. தம்பி எல்வினுடன் களமிறங்கும் ராகவா லாரன்ஸ் - அதிவேகமாக வரும் Bullet!