சமூக நலம் காக்க "1 கோடி கையெழுத்து இயக்கம்".. சூப்பர் ஸ்டார் வரிசையில் சைன் போட்டு ஆதரித்த சூர்யா!
"போதையற்ற தமிழ்நாடு" என்ற குறிக்கோளை முன்வைத்து DYFI "ஒரு கோடி கையெழுத்து இயக்கம்" என்ற ஒரு இயக்கத்தை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.
தமிழக மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் பல குடும்பங்கள் இன்று நிர்கதியாக நிற்பதற்கு ஒரு மிகப்பெரிய காரணமாக திகழ்ந்து வருகிறது போதைப்பொருள் பழக்கம். எளிதில் ஒருவரை அடிமையாக்குவதோடு அவரை பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நிலைகுலைய செய்வது தான் இந்த போதைப்பொருள் பழக்கம்.
இந்நிலையில் "போதையற்ற தமிழ்நாடு" என்ற குறிக்கோளை முன்வைத்து DYFI என்று அழைக்கப்படும் டெமாக்ரடிக் யூத் ஃபெடரேசன் ஆப் இந்தியா அமைப்பின் தமிழக பிரிவு "ஒரு கோடி கையெழுத்து இயக்கம்" என்ற ஒரு இயக்கத்தை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.
இதற்காக பல்வேறு பிரபலங்களிடம் இந்த ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில், கையொப்பம் வாங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு துவக்கத்தில் பிப்ரவரி மாதம் 25ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்துட்டு அதை ஆதரித்தார்.
இந்நிலையில் அவரைத் தொடர்ந்து பல முக்கிய பிரபலன்கள் இதில் கையெழுத்திட்டு வந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யாவும் இந்த இயக்கத்தில் கையெழுத்திட்டுள்ளார். ஏற்கனவே சூர்யா தனது அகரம் அறக்கட்டளையின் மூலம் பல்வேறு நல்ல பல காரியங்களை செய்து வருகிறார் என்பது நாம் அறிந்ததே. அதன் ஒரு பகுதியாக இந்த போதை ஒழிப்பு பிரச்சாரத்தில் தன்னைத்தானே நடிகர் சூர்யா ஈடுபடுத்திக் கொண்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தர்ஷா குப்தாவின் டபுள் டோஸ் கவர்ச்சியால் திக்குமுக்காடிப்போன ரசிகர்கள்... கிக்கான ஹாட் கிளிக்ஸ் இதோ