விஜே விக்னேஷ்காந்த் திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்திய சிவகார்த்திகேயன்..! வைரலாகும் வெடிங் போட்டோஸ்!
பிரபல விஜே மற்றும் காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் விஜே விக்னேஷ்காந்துக்கு, அவருடைய சொந்த ஊரில் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
யூடியூப் மூலம் பிரபலமான பலர் தற்போது வெள்ளித்திரை நடிகராக மாறியுள்ளனர். அந்த வரிசையில் ஸ்மைல் சேட்டை எனும் நிகழ்ச்சியைத் தொடங்கி பின்னர் படி படியாக உயர்ந்து, தற்போது ப்ளாக்ஷீப், உனக்கென்னப்பா உள்ளிட்ட யூடியூப் சேனல்கள் மற்றும் பி.எஸ்.வேல்யூ ஓடிடி தளம், என மீடியாவில் பல வெற்றிகரமாக பயணித்து வருபவர் விஜே விக்னேஷ்காந்த்.
யூடியூப் மூலம் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி, வெள்ளித்திரையுலும் ஒரு காமெடியனாக நடித்து வருகிறார். மேலும் பல்வேறு விருது விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் செய்திகள்: முதலில் கதையை புரிஞ்சிகிட்டு வாங்க..! வாயை விட்டு சிக்கிய பத்திரிகையாளரை கலாய்த்து விட்ட கார்த்தி!
இவர் நடிகராக முதன் முதலில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 28 திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தோன்றி கிரிக்கெட் வர்ணணையாளராக நடித்திருந்தார்.
இதையடுத்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர, மீசைய முறுக்கு திரைப்படத்தில் ஹிப் ஹாப் ஆதியின் நண்பனாக தனது அறிமுகத்தை கொடுத்தார். இதைத் தொடர்ந்து கார்த்தியின் தேவ், நட்பே துணை, மெஹந்தி சர்கஸ், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு உள்ளிட்ட திரைப்படங்களில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியால் கரு கலைந்துவிட்டது..! சுஜா - சிவகுமார் சொன்ன ஷாக்கிங் தகவல்!
இந்த நிலையில், வி.ஜே. விக்னேஷ்காந்துக்கு, கடந்த மே மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடந்த நிலையில், இன்று இவரது திருமணமும் நடந்து முடிந்துள்ளது.
அவரது சொந்த ஊரான திருச்சியில் தான் இவரது திருமணம் நடந்துள்ளது. இதில் பிளாக்ஷீப் மற்றும் இவருடன் நடித்த நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்: இது அல்லவா குரு மரியாதை... மணிரத்னத்தை கண்டதும் ஐஸ்வர்யா ராய் செய்த செயல்! வைரலாகும் வீடியோ!
குறிப்பாக பிரபல பேச்சாளரும், நடிகருமான கு. ஞானசம்பந்தன் விஜே விக்னேஷ்காந்த் திருமணத்தில் கலந்து கொண்டு தாலி எடுத்து கொடுத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.
தற்போது இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ... ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: ச்சீ... ச்சீ... அதுக்குன்னு இவ்வளவு மோசமா? போட்டிருக்கும் பேன்ட்டை அவிழ்த்து உள்ளாடையை காட்டிய சிம்பு பட நாயகி