முதல் முறையாக வெளியான சிவகார்த்திகேயனின் மகன் புகைப்படம்! சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது!
நடிகர் சிவகார்த்திகேயனின் செல்ல மகன் குகன் தாஸின் புகைப்படம் முதல் முறையாக வெளியாக அது தாறுமாறாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது.
திறமையும் விடா முயற்சியும் இருந்தால், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் இளைஞர்கள் கூட முன்னணி நடிகராக உயர் முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் நடிகர் சிவகார்த்தியன். என்ஜினீயரிங் பட்டதாரியாக இருந்தும், சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில், போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் பட்டத்தை வென்றார். இவரது கலகலப்பான பேச்சுக்கு, விஜய் டிவி முன்வந்து கொடுத்த, தொகுப்பாளர் பணியை கெட்டியாக பிடித்து கொண்ட சிவகார்த்திகேயன், ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் நடன திறமையையும் அசால்டாக வெளிப்படுத்தி டைட்டிலை வென்றார்.
3 படத்தில் தனுஷுக்கு நண்பராக காமெடி ரோலில் நடித்த சிவா, பின்னர் இயக்குனர்பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2012-ம் வெளியான மெரினா படம் மூலம் ஹீரோவாக மாறினார். இவரின் முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்தடுத்த படங்களை கண்ட மேனிக்கு தேர்வு செய்து நடிக்காமல், தனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தை மட்டுமே தேர்வு செய்து நடித்தார்.
மேலும் செய்திகள்: அதிர்ச்சி.. 20 மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன் மகள்! என்ன ஆச்சு? அவரே கூறிய தகவல்!
அந்த வகையில் இவர் இவர் நடிப்பில் வெளியான, மான் கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மனம் கொத்தி பறவை, ரஜினி முருகன் என அடுத்தடுத்த படங்கள் ஹிட் லிஸ்டில் இணைந்தது. இதன்மூலம் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்தார் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் ஆகிய படங்கள் 100 கோடி கிளைப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இவரை பற்றி எந்த தகவல் வெளியானாலும், வைரலாக்குவது போல்... இவரது பிள்ளைகள் குறித்த தகவல் வெளியானாலும் அதனை சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்!
அந்த வகையில், சமீபத்தில் கூட, சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா... செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது. இதை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் மகன் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.
இதுவரை தன்னுடைய மகன்சிவகார்த்திகேயன் மகன் புகைப்படத்தை சிவகார்திகேயன், முகம் தெரியாமல் மட்டுமே வெளியிட்டு வந்த நிலையில்... முதல் முறையாக அவரது முகம் தெரியும்படி வெளியாகியுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அப்படியே சிவகார்த்திகேயனை அவரது மகன் உரித்து வைத்துள்ளதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை யார்..? என்ன செய்கிறார்... தற்கொலைக்கு என்ன காரணம்?