நான் நடிச்சதுலயே பிரச்சனையே இல்லாம ரிலீஸ் ஆன படம் ‘வெந்து தணிந்தது காடு’ தான் - சிம்பு எமோஷனல் பேச்சு
சினிமாவில் தட்டிவிடுறதுக்கு நிறைய பேர் இருக்காங்க, தட்டி கொடுக்குறதுக்கு தான் இன்னைக்கு ஆட்களே இல்லை என வெந்து தணிந்தது காடு சக்சஸ் மீட்டில் நடிகர் சிம்பு பேசி உள்ளார்.
சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. வித்தியாசமான கதையம்சத்துடன் ரிலீசாகி உள்ள இப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டு உள்ளது. மக்கள் மத்தியில் இப்படத்துக்கு வரவேற்பு கிடைத்து வருவதால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிம்பு, இயக்குனர் கவுதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு இப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் ஒவ்வொருவரும் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த மீடியாவுக்கு நன்றி தெரிவித்து பேசினர்.
இதையும் படியுங்கள்... மல்லிப்பூ பாடல் ஸ்கிரிப்ட்லயே கிடையாது... வெந்து தணிந்தது காடு சக்சஸ் மீட்டில் கவுதம் மேனன் சொன்ன சீக்ரெட்
அதன்படி சிம்பு பேசியதாவது : “ரிலீசுக்கு முன் படத்தை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என பயமாக இருந்தது. ஆனால் ரிலீசுக்கு பின் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதை மக்களிடம் கொண்டு சேர்ந்த பிரஸ் மற்றும் மீடியாவிற்கு நன்றி. நான் நடிச்சதுலயே பிரச்சனையே இல்லாம ரிலீஸ் ஆன படம் இதுதான். தியேட்டருக்கெல்லாம் கேடிஎம் ஒரு நாளைக்கு முன்னாடியே அனுப்பிட்டாங்க. அதெல்லாம் பார்க்கும் போது இது கனவா இல்லை நிஜமானு கேட்க தோணுச்சு.
இந்த படம் இன்று இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரீச் ஆனதற்கு காரணம் விமர்சனங்கள் தான். 80 சதவீதம் நல்ல விமர்சனங்களே வந்துள்ளன. சினிமாவில் தட்டிவிடுறதுக்கு நிறைய பேர் இருக்காங்க, தட்டி கொடுக்குறதுக்கு தான் இன்னைக்கு ஆட்களே இல்லை. இரண்டாம் பாகத்துல என்னவெல்லாம் வச்சிருக்காங்கனு தெரியல. அதையாச்சும் கொஞ்சம் ஜனரஞ்சகமா, ரசிகர்கள் கத்தி என்ஜாய் பண்ற மாதிரி விஷயங்கள்லாம் வச்சீங்கனா நல்லா இருக்கும்” என கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்... ஒன்றல்ல.. இரண்டல்ல... அரை டஜன் படங்களுக்கு மேல் டபுள் ஆக்ஷனில் மிரட்டிய அஜித் - முழு லிஸ்ட் இதோ