நண்பனுக்காக பிக்பாஸ் பார்த்த விஜய்.... எலிமினேட் ஆனதும் என்ன சொன்னார்? - ஓப்பனாக போட்டுடைத்த சஞ்சீவ்
நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னரும், எலிமினேட் ஆகிய பிறகும் தளபதி என்ன சொன்னார் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.
பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழில் இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 5-வது சீசனில் ராஜு டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு பிக்பாஸ் டிராபியும், ரூ.50 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக பங்கேற்றனர்.
இவர்கள் இருவரும் 50 நாட்களை கடந்த பிறகு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றாலும், மக்கள் மனதில் நன்மதிப்பை பெற்றனர். அமீர் கூட ஒரு சில சர்ச்சைகளில் சிக்கினாலும், சஞ்சீவ் நேர்மையின் சிகரமாக இருந்து மக்களின் மனதை வென்றார் என்றே சொல்லலாம். நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னரும், எலிமினேட் ஆகிய பிறகும் தளபதி என்ன சொன்னார் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக போறேன்னும் விஜய்யிடம் முதலில் நான் சொன்னதும் சிரிச்சான். உள்ள போய் சமாளிச்சிருவியானு கேட்டான். கூப்பிடுறாங்க.. போறேன், என்னதான் நடக்குதுனு பாப்போம்னு சொன்னேன். அதற்கு விஜய், “என்னத்துக்கு உன்ன கூப்பிடுறாங்க? உள்ள போய் என்ன பண்ணுவ நீ?" என்று கேட்டாராம்.
அதற்கு சஞ்சீவ், “முடிஞ்ச வரைக்கு ஜாலியா இருப்பேன், ஏதாச்சு பிரச்சனைனு வந்தா, நாமளும் பண்ண வேண்டியது தான்" என்று பதிலளித்தாராம். பின்னர் “என்ன தோணுதோ.. அதை பண்ணு.. ஒரு கலக்கு கலக்கிட்டு வா! ஆல் தி பெஸ்ட்னு" சொல்லி அனுப்பி வைத்தாராம் தளபதி. பின்னர் எலிமினேட் ஆகி வெளியே வந்த பின்னரும் விஜய், சஞ்சீவிடம் பேசினாராம்.
அப்போது “நீ உள்ளே போனப்போ எப்படி போனியோ அது வேற.. ஆனா நீ வெளியில வரும் போது ரொம்ப நல்ல பெயரோட வந்து இருக்கன்னு எல்லாருமே சொல்றாங்க. நீ போனதால நானும் பிக்பாஸ் ஷோவை கொஞ்சம் ரெகுலரா பார்த்தேன். உன் கேம் பிளே நல்லா இருந்துச்சு” என்று கூறி வாழ்த்தினாராம் விஜய்.