கணவரின் முதல் திருமணத்தின் போது குழந்தையாக இருந்த நடிகைகள் யார்... யார் தெரியுமா?
திரையுலக பிரபலங்கள் அதிக வயது வித்தியாசம் உள்ள பெண்களை திருமணம் செய்துகொள்வது என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அப்படி முதல் திருமணத்தின் போது குழந்தையாக இருந்த நடிகைகளை, பின்னர் திருமணம் செய்துகொண்ட நடிகர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சைஃப் அலி கான் முதன்முதலில் கடந்த 1991-ம் ஆண்டு தன்னைவிட 12 வயது மூத்தவரான அம்ரிதா சிங்கை மணந்தார். அப்போது நடிகை கரீனா கபூருக்கு வெறும் 11 வயது தானாம், அவர் சைஃப் - அம்ரிதா திருமணத்திற்கு தந்தை ரந்தீர் கபூருடன் வந்திருந்ததாகவும், அப்போது அவர் சைஃபை அங்கிள் என்று அழைத்து, வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
கே.ஜி.எஃப் 2 படத்தில் வில்லனாக மிரட்டியவரும், பாலிவுட் நட்சத்திரமுமான சஞ்சய் தத், கடந்த 1987-ம் ஆண்டு ரிச்சா ஷர்மாவை முதல் திருமணம் செய்து கொண்டார். அவர் 1996 இல் இறந்துவிட்டதால், பின்னர் 1998-ல், ரியா பிள்ளை என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் சில மாதங்களில் விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து மூன்றாவதாக மன்யதாவை 2008ல் திருமணம் செய்துகொண்டார். சஞ்சய் தத்தின் முதல் திருமணத்தின் போது மன்யதாவுக்கு வெறும் 9 வயதுதான்.
பழம்பெரும் பாலிவுட் நடிகர் ஹேமன் தர்மேந்திராவின் இரண்டாவது மனைவி ஹேமா மாலினி. இவர்கள் இருவரும் 1980-ல் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் நடிகர் தர்மேந்திராவுக்கு முதல் திருமணம் நடைபெற்றபோது, ஹேமமாலினிக்கு வெறும் 6 வயதுதான். ஆம், ஹேமமாலினி 1948-ல் பிறந்தார், அதே சமயம் தர்மேந்திரா, பிரகாஷ் கவுர் என்பவரை 1954-ல் முதல் திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படியுங்கள்... ‘வல்லமை’லாம் இல்லைங்க... அஜித் படத்துக்காக ஜெய்சங்கரின் கிளாசிக் ஹிட் பட டைட்டிலை தட்டித்தூக்கிய எச்.வினோத்
பாலிவுட்டின் மூத்த நடிகரான கபீர் பேடி 4 திருமணங்களை செய்து கொண்டார். அவரது நான்காவது திருமணம் கடந்த 2016ம் ஆண்டு நடந்தது. அவர் தன்னைவிட கிட்டத்தட்ட 29 வயது இளையவரான பர்வீன் துசாஞ் என்பவரை மணந்தார். கபீர் பேடி கடந்த 1969-ம் ஆண்டு ப்ரோதிமா கௌரியை முதன்முதலில் திருமணம் செய்து கொண்டபோது, பர்வீனுக்கு வெறும் 6 வயதுதானாம்.
இந்தி பாடகர் கிஷோர் குமாருக்கு நான்கு திருமணங்கள் நடந்துள்ளன, அவருடைய கடைசி மனைவி லீனா சந்தவர்கர், இவரை கடந்த 1980-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிஷோர் குமார் 1950-ல், ரூமா குஹா தாகுர்தா என்பவரை முதன்முதலில் திருமணம் செய்துகொண்டபோது லீனா சந்தவர்க்கருக்கு ஒரு வயது கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சேரனிடம் பற்ற வைத்த சினேகா... 'ஆட்டோகிராப்' பட வாய்ப்பை இழந்த பிரபலம்! அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்!