சேரனிடம் பற்ற வைத்த சினேகா... 'ஆட்டோகிராப்' பட வாய்ப்பை இழந்த பிரபலம்! அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்!
இயக்குனர் சேரனிடம் உண்மை என்ன என்பது தெரியாமல், தான் திட்டிய விஷயத்தை கூறியதால் 'ஆட்டோகிராப்' படத்தில் இருந்து விலகியதாக இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர், பாண்டிராஜ். இவர் இயக்குனர் சேரன், தங்கர் பச்சான் போன்ற இயக்குனர்களிடம், துணை இயக்குனராக பணியாற்றிய பின்னர் ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
அந்த வகையில் இயக்குனர் சேரனிடம், பாண்டவர் பூமி படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார். சேரனிடம் வேலை செய்தால் சம்பளம் கூட கிடையாது என்றாலும் திரைப்பட அனுபவம் கிடைக்கும் என்பதற்காக, இந்த படத்தை தொடர்ந்து ஆட்டோகிராப் படத்திலும் பணியாற்றியுள்ளார்.
மேலும் செய்திகள்: உடலில் பல இடங்களில் டாட்டூ.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறி ஹாலிவுட் ஹீரோயின் போல இருக்கும் குஷ்பு மகள் அவந்திகா
சேரனை பொறுத்தவரை மிகவும் அன்பான மனிதர், கோபம் வந்து விட்டால் யார் இருக்கிறார்... இல்லை என பார்க்க மாட்டார் திட்டி தீர்த்து விடுவார். அப்படி தான். ஒருமுறை பாண்டிய ராஜையும் வெளுத்து வாங்கியுள்ளார். இவரும் அவர் திட்டிய கோவத்தை யார் மேல் காட்டுவது என தெரியாமல், டிரைவர் ஒருவர் மேல் காட்டியுள்ளார்.
அவரோ, பாண்டிய ராஜை பற்றி... அவர் சொல்லாதையும் சேர்ந்து சினேகாவிடம் கூறியுள்ளார். சினேகாவும் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ளாமல், அப்படியே சென்று சேரன் காதில் பற்ற வைக்க, அவரும் என்ன என்று கூட விசாரிக்காமல், 200 பேர் கூடி இருக்கும் இடத்தில் இவரை தட்டி தீர்த்துள்ளார்.
மேலும் செய்திகள்: சமந்தாவுக்கு ஏற்பட்ட தீவிர உடல்நல பிரச்சனை..! சாகுந்தலம் மற்றும் யசோதா படங்களுக்கு வந்த சோதனை?
தன்மானத்தை இழந்து இனி இங்கு வேலை செய்ய வேண்டாம் என எண்ணிய பாண்டியராஜ், நடந்தே அலுவலகத்திற்கு சென்றுள்ளார். மேலும் வந்த கோபத்திலேயே தங்கர் பச்சானிடம் துணை இயக்குனர் வாய்ப்பு கேட்க அவரும் உடனே கொடுத்துள்ளார். அதன் பின் தான் அழகி படத்தையும் அவர் இயக்க அதில் பாண்டிராஜ் வேலை செய்தார்.
சேரனிடம் துணை இயக்குனராக மட்டும் பழகாமல், ஒரு தம்பி போன்றும் பழகி வந்ததாகவும் ஆனால் அது ஒரு நடிகையால் முடிவுக்கு வந்தது, மிகுந்த வேதனையளிப்பதாக இவர் கூறிய தகவல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: கவர்ச்சி கதவை திறந்த லாஸ்லியா.! டீப் நெக் ஜாக்கட்டில் ஒற்றை கொக்கியை பூட்டி இளசுகளை ஈர்க்கும் ஹாட் போட்டோஸ்!