சமந்தாவுக்கு ஏற்பட்ட தீவிர உடல்நல பிரச்சனை..! சாகுந்தலம் மற்றும் யசோதா படங்களுக்கு வந்த சோதனை?
நடிகை சமந்தா தற்போது தீவிர, உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இவர் நடிக்கும் இரண்டு படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவாகரத்துக்கு பின்னரும் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில், முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருபவர் சமந்தா. திறமையான நடிப்பு மற்றும் துள்ளலான அழகால் ரசிகர்கள் மனதை வசீகரித்துள்ள சமந்தா, விவாகரத்துக்கு பின்னர், ஹாலிவுட் படங்களில் கூட கமிட் ஆகி கெத்து காட்டி வருகிறார்.
சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள 'யசோதா' திரைப்படத்தை இந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு, வெளியிட படக்குழு திட்டமிட்ட நிலையில்... பல படங்கள் வரிசை கட்டி நின்றதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியான போது கூட படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் வெளியானது.
மேலும் செய்திகள்: கவர்ச்சி கதவை திறந்த லாஸ்லியா.! டீப் நெக் ஜாக்கட்டில் ஒற்றை கொக்கியை பூட்டி இளசுகளை ஈர்க்கும் ஹாட் போட்டோஸ்!
இந்த படம் ரிலீஸ் தேதி, அறிவித்தால்... புரோமோஷன் பணிகளில் சமந்தா கலந்து கொள்வது மிகவும் அவசியம் என படக்குழுவினர் கருதுகிறார்கள். காரணம் இது சமந்தாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம், தற்போது சமந்தா தோல் பிரச்சனைக்காக அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதால், அவர் எப்போது குணமடைவார் என்பது தெரியாததால்... படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட படக்குழு தாமதமாக்கி வருவதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஆகும். இந்த படத்தின், ஃபர்ஸ்ட் லுக்.. கடந்த பிப்ரவரி 2022 இல் வெளியானது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவலையும் படக்குழு தாமதம் ஆக்கி வருவதற்கும், சமந்தா ப்ரோமோஷன் போன்ற விஷயங்களில் கலந்து கொள்வதற்காகவே என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: பப்பில் கிக் ஏற்றும் கவர்ச்சிகரமான குட்டையில் உடையில் குத்தாட்டம் போட்ட தமன்னா! போதையேற்றும் ஹாட் கிளிக்ஸ்!
எனவே அமெரிக்காவில் தோல் சிகிச்சைக்காக சென்றுள்ள சமந்தா முழுமையாக குணமடைந்து வந்த பின்னரே இந்த இரு படங்களின் ரிலீஸ் தேதி மற்றும் புரோமோஷன் பணிகள் துவங்கும் என கூறப்படுகிறது.