MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியது ஏன்? நடிகர் சாய் தீனா கூறிய பரபரப்பு விளக்கம்.!

குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியது ஏன்? நடிகர் சாய் தீனா கூறிய பரபரப்பு விளக்கம்.!

சமீபத்தில் வில்லன் நடிகர் சாய் தீனா, புத்த மதத்திற்கு மாறிய நிலையில்... தற்போது புத்த மதத்திற்கு மாறியது ஏன்? என்று முதல் முறையாக விளக்கம் கொடுத்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Nov 16 2022, 07:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஒரு விளம்பரப் பலகை கலைஞராகத்தான் மீடியாவின் உள்ளே நுழைந்து, பின் அடியாள் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் சாய் தீனா. கமலஹாசனின் இயக்கி நடித்து கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ' விருமாண்டி ' திரைப்படத்தில் சிறைவார்டானாக நடித்து முதல் படத்திலேயே தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இதை தொடர்ந்து புதுப்பேட்டை, எந்திரன், கொம்பன், இன்று நேற்று நாளை, கணிதம், மாநகரம், மெர்சல், வடசென்னை, திமிர் பிடித்தவன், பிகில், மாஸ்டர் போன்ற பல பிடித்தவன், ஹிட் படங்களில் வில்லனாக மிரட்டி இருக்கிறார். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லனாக தான் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ' எதற்கும்  துணிந்தவன் ' படத்தில் தீனா நடித்து இருந்தார்.

அசீமுடன் ரஷிதாவை கோர்த்து விட்ட பிக்பாஸ்..! ரகசியமாக நடக்க போகும் வேலையால் கடுப்பாக போகும் ராபர்ட்..! வீடியோ..

35

சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும், இவரின் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளது. ஒரு பக்கம் நடிப்பிலும் மற்றொரு பக்கம், எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் உதவும் உள்ளம் கொண்டவர்.  கொரோனா பாதிப்பில் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்பட்ட மக்களுக்கு இவர் தன்னால் முடிந்த உதவிகளை செய்திருந்தார். மேலும் திரைத்துறையை சேர்ந்த பலருக்கு பல்வேறு உதவிகளையும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்னால் முடிந்த மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார். படத்தில் வில்லனாக நடித்தாலும், இவர் நிஜத்தில் ஹீரோ என இவரை புகழ்ந்து தள்ளும் பல ரசிகர்கள் உள்ளனர்.

45

இந்நிலையில் நடிகர் சாய் தீனா சமீபத்தில் தன்னுடைய குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியது பரபரப்பாக பேசப்பட்டது. புத்த துறவி மௌரிய முன்னிலையில் புத்த மதத்தை தழுவதற்காக 22 விதிகளை சொல்லி நடிகர் தீனா புத்த மதத்திற்கு மாறினார். இந்நிலையில் இது குறித்து நடிகர் சாய் தீனா கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது... " நான் இப்போது புத்த மதத்திற்கு மாறவில்லை. ஐந்து வருடமாகவே நான் புத்த மதத்தை பின்பற்றி வருகிறேன்.

திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பமாக இருக்கிறாரா சீரியல் நடிகை மகாலட்சுமி..? சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம்

55

நான் புத்த குடும்பத்தை சேர்ந்தவன் தான். என்னுடைய மொத்த குடும்பமும் புத்த மதத்திற்கு மாறி இருப்பது உண்மைதான். இந்தியாவில் 3 மதங்கள் தான் இருக்கிறது என்று சொல்வது தவறான ஒன்று. புத்த மதமும் இருக்கிறது. உண்மையை சொல்லவேண்டும் என்றால் புத்த மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் இல்லை. என்னை பொறுத்தவரை ஜாதிகள் என்பது ஜாதி ஒரு சாக்கடை, குப்பை.." எனவே ஜாதிகள் இல்லாத மதமான புத்த மதத்திற்கு மாறியுள்ளதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved