அசீமுடன் ரஷிதாவை கோர்த்து விட்ட பிக்பாஸ்..! ரகசியமாக நடக்க போகும் வேலையால் கடுப்பாக போகும் ராபர்ட்..! வீடியோ..
பிக்பாஸ் வீட்டில் தற்போது ரக்ஷிதா மற்றும் அசீமுக்கு மட்டும் ரகசிய டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் கொடுத்துள்ளார். இது குறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் முழுக்க பேக்கிரி டாஸ்க் மூலம் ஸ்வீட் செய்து அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதனால் பல பிரச்சனைகள் பிக்பாஸ் வீட்டில் வெடித்ததை பார்க்க முடிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி உள்ளது. இந்த அரண்மனை டாஸ்கில் தற்போது ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரக்ஷிதாவும் மந்திரியாக விக்ரமனும், படைத்தளபதியாக அசீமும், உள்ளனர்.
இந்த டாஸ்கில் அவ்வப்போது ராணியாக இருக்கும் ரக்ஷிதாவிடம் தன்னுடைய ரொமான்ஸ் லீலையை காட்டி வரும் ராபர்ட் மாஸ்டர், நிகழ்ச்சியை கலகலப்பாக்கி வருகிறார். அதே நேரத்தில் ரக்ஷிதா ஒருவித கடுப்புடன் தான் உள்ளார். மேலும் இன்றைய புரோமோவில் ராணியின் சாப்பாட்டில் உப்பு அதிகமாக போட்டதாக அசீம் மற்றும் விக்ரமனுக்கு இடையே சண்டை வந்ததையும் பார்க்க முடிந்தது.
தொழிலதிபருடன் நடிகை தமன்னாவுக்கு விரைவில் திருமணம்? பரபரக்கும் கல்யாண வேலை.. தீயாக பரவும் தகவல்!
மேலும் மீண்டும் அசீம் விக்ரமனை வாயா... போயா... என மரியாதை இல்லாமல் பேசி இருந்தார். ஏற்கனவே இப்படிப்பட்ட பேச்சுகளுக்கு அவர் கண்டிக்கப்பட்ட நிலையில், மீண்டும் இதுபோன்று வாயை விட்டு சிக்கியுள்ளார், அதேபோல் ராணியின் சாப்பாட்டில் அதிகம் உப்பு போட்ட ஷிவின் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டார்.
இந்த டாஸ்க்கிலும் பல பிரச்சனைகள் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது பிக்பாஸ் அன்ஸீன் ப்ரோமோ மூலம் அசீம் மற்றும் ரக்ஷிதாவுக்கு பிக்பாஸ் கொடுத்துள்ள ரகசிய டாஸ்க் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. அதாவது... "இந்த ராஜ்யத்தின் ஒரு ராஜ ரகசியத்தை தான் சொல்வதாகவும், உங்களுடைய கஜானாவில் உள்ள செல்வங்கள் அனைத்தும் காலி ஆகிவிட்டது. எனவே ராஜ வம்சத்தை சேர்ந்த பொருட்களை களவாடி கஜானாவில் சேர்ப்பது தான் ஒரே வழி. உங்களைத் தவிர ராஜ வம்சத்தை சேர்ந்த இன்னொரு நபருக்கும் இந்த விஷயம் தெரியும். இதற்காக மேப் ஒன்றை ரக்ஷிதாவிடம் கொடுத்து, நீங்கள் அடையாளம் காணப்படும் அந்த நபரிடமும் இதேபோன்று ஒரு மேப் இருக்கும் என தெரிவிக்கிறார். பின்னர் ரக்ஷிதா மற்றும் அசீம் இருவரும் இந்த மேப்பை காட்டி கூட்டாளிகள் ஆகின்றனர்.
ராஜா வம்சத்தின் பொருட்களைத் திருடி கஜானாவில் இவர்கள் இருவரும் சேர்க்க உள்ளதால், சில நாட்கள் ஒன்றாகவே இருக்கக்கூடும். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்த்து ராபர்ட் மாஸ்டர் எப்படி கொந்தளிக்க போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- bb 6 tamil
- bigg boss 6
- bigg boss 6 tamil
- bigg boss 6 tamil contestants
- bigg boss 6 tamil contestants list
- bigg boss 6 tamil promo
- bigg boss season 6
- bigg boss season 6 tamil
- bigg boss season 6 tamil promo
- bigg boss tamil
- bigg boss tamil 6
- bigg boss tamil 6 contestants
- bigg boss tamil 6 promo
- bigg boss tamil season 6
- biggboss
- biggboss tamil season 6
- biggboss tamil season 6 review
- biggboss tamil troll season 6
- tamil
- tamil shows
- tamil tv