அட்ஜெஸ்மெண்ட்டுக்கு வரச்சொல்லி டார்ச்சர் பண்ணிய பிரபல நடிகை... ஷாக்கிங் தகவலை வெளியிட்ட பிக்பாஸ் நடிகர்
சினிமாவில் அட்ஜெஸ்மெண்ட் தொல்லை இருப்பதாக நடிகைகள் தொடர்ந்து புகார் கூறி வரும் நிலையில், தற்போது பிரபல நடிகரும் அந்த புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
சினிமாவில் அட்ஜெஸ்மெண்ட் தொல்லை இருப்பதாக நடிகைகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். சமீப காலமாக சீரியல் நடிகைகளும் இதுகுறித்து மனம்திறந்து பேசி வருகின்றனர். இந்நிலையில், தானும் அட்ஜெஸ்மெண்ட் தொல்லையை அனுபவித்ததாக நடிகர் ஒருவர் கூறி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதுவும் பிரபல நடிகை ஒருவர் தன்னை அட்ஜெஸ்மெண்ட்டுக்கு அழைத்ததாக கூறி அதிர வைத்துள்ளார் நடிகர் ரவி கிஷன்.
இந்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்து பிரபலமானவர் ரவி கிஷன். கடந்த 1992-ம் ஆண்டு ரிலீஸ் ஆன பீதாம்பர் படம் மூலம் நாயகனாக அறிமுகமான இவர் சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது 53 வயதாகும் ரவி கிஷன், தெலுங்கு, குஜராத்தி, கன்னடா, மராத்தி என பல்வேறு மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... மாஸ் காட்ட போகும் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு! டைட்டிலுக்கு முன்பே ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!
இவர் தான் சினிமாவில் தானும் அட்ஜெஸ்மெண்ட் தொல்லையை அனுபவித்ததாக கூறி உள்ளார். சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து அவர் பேசியதாவது : “என்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் ஒரு படத்தில் நடிக்க தேர்வானபோது, அப்படத்தில் ஹீரோயினாக நடிக்க இருந்த நடிகை எனக்கு திடீரென போன் பண்ணி இரவில் காஃபி குடிக்க வருகிறீர்களா என அழைத்தார். பகலில் தானே காஃபி குடிக்க அழைப்பார்கள், இவர் ஏன் இரவில் அழைக்கிறார் என குழம்பிப் போய் இருந்தேன். பின்னர் தான் எனக்கு விஷயம் தெரிந்து நான் முடியாது என மறுத்துவிட்டேன்.
நான் மறுத்த பின்னரும் விடாமல் போன் பண்ணி டார்ச்சர் செய்தார். அதற்கெல்லாம் நான் செவிசாய்க்கவில்லை. அந்த நடிகையின் ஆசைக்கு நான் இணங்காததால் என்னை அந்த படத்தில் இருந்தே நீக்கிவிட்டனர். அப்போது தான் எனக்கு எல்லா விஷயமும் தெரியவந்தது. அந்த நடிகை யார் என்பதை கூற மறுத்துவிட்ட ரவி கிஷன், தற்போது அவர் மிகப்பெரிய பிரபலமாக இருக்கிறார் என்று மட்டும் ஹிண்ட் கொடுத்தார். இதையடுத்து அந்த நடிகை யார் என நெட்டிசன்கள் வலைவீசி தேட ஆரம்பித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... சொந்த வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த பாண்டியன் ஸ்டோர் தனம்..! குவியும் வாழ்த்துக்கள்..!