சொந்த வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த பாண்டியன் ஸ்டோர் தனம்..! குவியும் வாழ்த்துக்கள்..!
டி.ஆர்.பி-யில் பட்டையை கிளப்பி வரும் விஜய் டிவி சேரியலான, 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில்... முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும், தனம் சொந்த வீடு கட்டி குடிபோயுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில், வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர் 'சுஜிதா' இயக்குனர் கே.பாக்யராஜ் இயக்கி, ஹீரோவாக நடித்து, கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான ’முந்தானை முடிச்சு’ பாக்யராஜின் குழந்தையாக நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து, பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் தன்னுடைய கியூட்டான சிரிப்பாலும், அழைத்தாலும் மயக்கும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சுஜிதா, ’பள்ளிக்கூடம்’ ’தாண்டவம்’ ’தியா’ உள்ளிட்ட படங்களில் அவரது குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன பின்னர், சில காலம்... சீரியல் மற்றும் திரைப்படங்கள் நடிக்க ரெஸ்ட் விட்ட நிலையில், தற்போது மீண்டும் ரசிகர்களை கவரும் விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை சுஜிதா - தனுஷ் தம்பதிகளுக்கு தன்வின் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். ஏற்கனவே சொந்த வீட்டில் வசித்து வரும், சுஜிதா தற்போது... மற்றொரு வீட்டை கட்டியுள்ளார். இந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் சமீபத்தில் நடித்துள்ளது.
Keerthy Suresh Love: கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம்! முதல் முறையாக மனம் திறந்த பெற்றோர்!
இந்த நிலையில் நடிகை சுஜிதா - தனுஷ் தம்பதிகளுக்கு தன்வின் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். ஏற்கனவே சொந்த வீட்டில் வசித்து வரும், சுஜிதா தற்போது... மற்றொரு வீட்டை கட்டியுள்ளார். இந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் சமீபத்தில் நடித்துள்ளது.