'பொன்னியின் செல்வன் 2' ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத முக்கிய பிரபலம்? அப்செட்டில் ரசிகர்கள்!
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், இதில்.. முக்கிய பிரபலம் ஒருவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கலந்து கொள்ள மாட்டார் என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள வரலாற்று காவியம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான நிலையில், இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.
சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான, முதல் சிங்கிள் பாடலான 'அக நக' பாடல் இதுவரை 9 மில்லியன் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து இப்படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாளை இப்படத்தின், ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதில் படக்குழுவினர் அனைவருமே கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Keerthy Suresh Love: கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம்! முதல் முறையாக மனம் திறந்த பெற்றோர்!
அதே போல் சிறப்பு விருந்தினராக, உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொள்ள உள்ளார். அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை அவர் கலந்து கொள்வார் என உறுதி செய்யும் விதமாக ஒரு போஸ்டர் கூட வெளியாகத்தால், அவர் கலந்து கொள்ள மாட்டாரா? என சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலர் அப்செட்டில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த ரஜினிகாந்த், பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தார். குறிப்பாக இந்த படத்தில் நான் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரம் வந்திய தேவன் மற்றும் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் என கூறியது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தின் ஆடியோ வெளியீட்டின் போது இருந்த அளவிற்கு தற்போது பரபரப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாளைய தினம் 'பொன்னியின் செல்வன் 2' இசைவெளியீட்டு விழாவில்... இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள, விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், நடிகர் ஜெயராம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்களும், இயக்குனர் மணிரத்தினம்... இசையின் நாயகனான ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.