MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாகுபலியை விட 2 மடங்கு அதிகம்... ஜீன்ஸ் பட பட்ஜெட்டை முதன்முறையாக வெளியிட்ட பிரசாந்த் - ஆத்தாடி இத்தனை கோடியா?

பாகுபலியை விட 2 மடங்கு அதிகம்... ஜீன்ஸ் பட பட்ஜெட்டை முதன்முறையாக வெளியிட்ட பிரசாந்த் - ஆத்தாடி இத்தனை கோடியா?

ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட படங்களுள் ஒன்று ஜீன்ஸ், அப்படத்தின் பட்ஜெட்டை நடிகர் பிரசாந்த் முதன்முறையாக பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 08 2024, 10:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Jeans Movie

Jeans Movie

1990களில் விஜய், அஜித்துக்கு நிகராக தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டவர் தான் பிரசாந்த். நடிகரும், இயக்குனருமான தியாகராஜனின் மகனான இவர், 17 வயதிலேயே ஹீரோவாகிவிட்டார். வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் அறிமுகமான பிரசாந்துக்கு முதல் படமே ஹிட்டானதை தொடர்ந்து பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள், ஆர்.கே.செல்வமணி இயக்கிய செம்பருத்தி, மணிரத்னத்தின் திருடா திருடா என அடுத்தடுத்து பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த படங்கள் ஹிட் அடித்தன.

25
Prasanth, Aishwarya Rai

Prasanth, Aishwarya Rai

இதனால் கோலிவுட்டின் டாப் ஸ்டாராக உருவெடுத்த பிரசாந்த், முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் ஜீன்ஸ். இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கினார். இப்படத்தின் கதை அஜித்துக்காக எழுதப்பட்டது. ஆனால் இறுதியில் பிரசாந்துக்கு அந்த வாய்ப்பு சென்றது. பிரசாந்தின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ஜீன்ஸ் படமும் ஒன்று. கடந்த 1998-ம் ஆண்டு வெளிவந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதையும் படியுங்கள்... தளபதி விஜய்யின் கோட் படத்தின் கதை இதுதானா? வெங்கட் பிரபுவின் ஃபார்முலா ரசிகர்களை கவருமா?

35
jeans movie Stills

jeans movie Stills

ஜீன்ஸ் திரைப்படத்தில் பிரசாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். மேலும் நாசர், செந்தில், லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் தான் படமாக்கப்பட்டன. அதுதவிர இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ஹைலைட்டாக பேசப்படுகின்றன. அதிலும் குறிப்பாக ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்’ பாடலுக்காக உலகில் உள்ள 7 அதிசயங்களிலும் படமாக்கி வியக்க வைத்திருந்தார் ஷங்கர்.

45
jeans movie pics

jeans movie pics

அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் படமாக்கப்பட்ட படமாக ஜீன்ஸ் இருந்தது. இருப்பினும் அப்படத்தின் பட்ஜெட் மட்டும் புரியாத புதிராகவே இருந்தது. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜீன்ஸ் படம் பற்றி பேசிய நடிகர் பிரசாந்த், அப்படத்தில் உலகில் உள்ள 7 அதிசயங்களுக்கும் சென்று 15 நாட்களில் பாடல் காட்சியை படமாக்கியதாக கூறினார்.

55
jeans movie Budget

jeans movie Budget

அப்படத்தின் ஒரிஜினல் பட்ஜெட்டை அவர் கூற மறுத்தாலும், அதன் இன்றைய மதிப்பு ரூ.450 கோடி இருக்கும் என தோராயமாக கூறினார். பாகுபலி படமே 200 கோடியில் படமாக்கப்பட்ட நிலையில், ஜீன்ஸ் படம் அதைவிட டபுள் மடங்கு பட்ஜெட்டில் படமாக்கப்பட்டிருக்கும் தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... 42 வயதான அல்லு அர்ஜுனின் உடற்பயிற்சி ரகசியம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இயக்குநர் ஷங்கர்
பிரசாந்த் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved