MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதி விஜய்யின் கோட் படத்தின் கதை இதுதானா? வெங்கட் பிரபுவின் ஃபார்முலா ரசிகர்களை கவருமா?

தளபதி விஜய்யின் கோட் படத்தின் கதை இதுதானா? வெங்கட் பிரபுவின் ஃபார்முலா ரசிகர்களை கவருமா?

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான விஜய்யின் கோட் படத்தின் கதை இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

2 Min read
Author : Ramya s
Published : Aug 08 2024, 09:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Actor Thalapathy Vijay The GOAT

Actor Thalapathy Vijay The GOAT

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். அவர் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் நடித்திருந்தார்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
GOAT

GOAT

இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது. மேலும் உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்து கடந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது. இதனால் பாக்ஸ் ஆபிஸ் கிங்காவும் விஜய் கருதப்படுகிறார். 

38
Goat

Goat

இதனிடையே தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ள அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார். கைவசம் இருக்கும் படங்களை முடித்து கொடுத்துவிட்டு, தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

48
Goat

Goat

அதன்படி கோட், தளபதி 69 ஆகிய படங்களில் மட்டுமே விஜய் நடிக்க உள்ளார். தளபதி 69 படத்தை யார் இயக்கப் போவது என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய்யின் கோட் படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

58
GOAT Update

GOAT Update

பிரசாந்த், பிரபுதேவா, மீனாக்ஷி சவுத்ரி, லைலா, அஜ்மல், மோகன், ஜெயராம், பார்வதி நாயர், வைபவ், பிரேம்ஜி மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.   இந்த படத்தின் போஸ்டர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் கோட் படத்தின் 3-வது சிங்கிள் சமீபத்தில் வெளியானது. ஆனால் இந்த பாடலில் விஜய்யின் டீ – ஏஜிங் லுக்  கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. எனினும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையவில்லை.

68
Goat Story Leaked

Goat Story Leaked

இந்த சூழலில் கோட் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ரஷ்யாவில் மாஸ்கோ மெட்ரோ ரயிலில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிரவாத தாக்குதலை மையமாக கொண்டே கோட் படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பிடிப்பதே கோட் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. தளபதி விஜய் தனது குழுவுடன் இணைந்து இந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதே கதையாம்.

78
Goat Story Leaked

Goat Story Leaked

ஆனால் கடந்த கால ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வரும் போது, விஜய்யின் சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படைக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த சிக்கல்கள் விஜய் மற்றும் அவரின் குழுவில் நிலைத்தன்மை குலைத்து, பரஸ்பர நம்பிக்கையையும் சிதைக்கிறதாம், இந்த சவால்களை கடந்து எப்படி தீவிரவாதிகளை விஜய் குழுவினர் பிடிக்கின்றனர் என்பதே கோட் படத்தின் கதையாம். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எனினும் இந்த தகவல் எந்தளவு உண்மை என்பது படம் வெளியான பின்னரே தெரியவரும். 

 

88
GOAT

GOAT

கோட் படத்தின் ட்ரெயலருக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக நெகட்டிவிட்டியை தவிர்க்க அடுத்த வாரத்தில் ட்ரெயிலரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே கோட் படத்தின் ட்ரெயிலர் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved