Prabhas : என்ன ஒரு தாராள மனசு... படம் பிளாப் ஆனதால் சம்பளத்தை திருப்பிகொடுத்த பிரபாஸ் - அதுவும் இத்தனை கோடியா?
Prabhas : ராதே ஷ்யாம் படத்திற்கு தெலுங்கைத் தவிர பிற மொழிகளில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதன் எதிரொலியாக வசூலிலும் பலத்த அடி வாங்கியது.
பான் இந்தியா படங்கள்
பாகுபலி படத்துக்கு பின்னர் பான் இந்தியா படங்களுக்கு இந்தியா முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் தெலுங்கில் தயாராகும் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்கள் பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படங்களாக வெளியிடப்படுகின்றன. அண்மையில் கூட தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் நல்ல வசூல் பார்த்தது.
ரூ.400 கோடி பட்ஜெட்
இதனால் பான் இந்தியா படங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனிடையே பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் திரைப்படம் வெளியானது. பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்திருந்த இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி இருந்தார். ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது.
ரூ.100 கோடி இழப்பு
புஷ்பாவைப் போல் ராதே ஷ்யாமும் வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் இப்படத்திற்கு தெலுங்கைத் தவிர பிற மொழிகளில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதன் எதிரொலியாக வசூலிலும் பலத்த அடி வாங்கியது ராதே ஷ்யாம். இப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பளத்தை திருப்பி கொடுத்த பிரபாஸ்
இதன்மூலம் இப்படத்தின் தயாரிப்பாளருக்கு மொத்தமாக சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக டோலிவுட் வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் இப்படத்திற்காக தான் வாங்கிய ரூ.100 கோடி சம்பளத் தொகையில் இருந்து ரூ.50 கோடியை திருப்பிக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபாஸின் இந்த செயல் ரசிகர்களையும், சினிமா பிரபலங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... pugazh : குக் வித் கோமாளி புகழுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு.. யுவன் இசையமைக்கும் படத்தின் மூலம் ஹீரோவாகிறார்