pugazh : குக் வித் கோமாளி புகழுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு.. யுவன் இசையமைக்கும் படத்தின் மூலம் ஹீரோவாகிறார்
Pugazh : அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து அசத்தி இருந்த புகழ் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.
குக் வித் கோமாளி
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. டிஆர்பி-யில் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸுக்கே டஃப் கொடுத்து வரும் இந்நிகழ்ச்சி இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்து தற்போது மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாப்புலர் ஆன புகழ்
குக் வித் கோமாளி முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் டைட்டில் வின்னர்கள் ஆகினர். தற்போது நடந்து வரும் மூன்றாவது சீசனில் அம்மு அபிராமி, ரோஷினி, சந்தோஷ் பிரதாப், தர்ஷன், கிரேஸ் கருணாஸ், ஸ்ருத்திகா ஆகியோர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய ஹிட் ஆவதற்கு காரணமே அதில் உள்ள கோமாளிகள் தான். அந்த வகையில், இதில் புகழ், ஷிவாங்கி, பாலா, குரேஷி, சுனிதா, பரத், மணிமேகலை, அதிர்ச்சி அருண் ஆகியோர் கோமாளிகளாக கலக்கி வருகின்றனர்.
ஹீரோவானார் புகழ்
குறிப்பாக இந்நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானது புகழ் தான். அவருக்கு தற்போது கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து அசத்தி இருந்த புகழ் தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.
மிஸ்டர் ஜூ கீப்பர்
அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்திற்கு ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என பெயரிடப்பட்டு உள்ளது. ஜே.எஸ்.சுரேஷ் இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் புகழுக்கு ஜோடியாக ஷிரின்கஞ்வாலா நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை பிலிப்பைன்ஸ் நாட்டில் படமாக்க உள்ளனர்.
இதையும் படியுங்கள்... Actor Prashanth :48 வயதில் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் நடிகர் பிரசாந்த்... எப்போ டும்டும்டும் தெரியுமா?