பாகுபலி நாயகன் பிரபாஸின் குடும்பத்தில் முக்கிய பிரபலம் மரணம்... ஆறுதல் கூறும் ரசிகர்கள்
பாகுபலி நாயகன் பிரபாஸின் உறவினரும், பிரபல தெலுங்கு நடிகருமான ரெபல் கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவால் காலமாகி உள்ளார். அவருக்கு வயது 82.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இவர் தற்போது பிசியான நடிகராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில், நடிகர் பிரபாஸின் குடும்பத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் மரணமடைந்திருப்பது அவரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர் பிரபாஸின் பெரியப்பாவும், பிரபல நடிகருமான ரெபல் கிருஷ்ணம் ராஜூ காலமாகி உள்ளார். இவருக்கு வயது 82. வயது மூப்பு காரணமாகவும், உடல் நலக்குறைவாலும் அவதிப்பட்டு வந்த இவரின் மறைவு பிரபாஸின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் ரெபல் கிருஷ்ணம் ராஜூ தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஆவார்.
இதையும் படியுங்கள்... கோலாகலமாக நடந்த ‘பரிதாபங்கள்’ கோபி-யின் திருமணம்... இணையத்தை கலக்கும் வெட்டிங் கிளிக்ஸ் இதோ
இவர் டோலிவுட்டில் 183 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்த இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் ஆவார். தமிழகத்தின் ஆளுநராக நியமிக்க இவர் 2 முறை பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரெபல் கிருஷ்ணம் ராஜூவின் மறைவு தெலுங்கு திரையுலகினரையும், அரசியல்வாதிகளையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் ரிபல் ஸ்டார் என்கிற பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஆம்பளைங்களும் மேகியும் ஒன்னு... நடிகை ரெஜினா சொன்ன அடல்ட் ஜோக் கேட்டு ஆடிப்போன நெட்டிசன்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.