’ஆதி புருஷ்’ டீஸர் பார்த்து... குழந்தையாக மாறிவிட்டேன்”.. பிரபாஸ் நெகிழ்ச்சி
இந்த டீஸரை ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம் என கூறியுள்ளார் பிரபாஸ்.
பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கும் பிரமாண்ட பட்ஜெட் படம் தான் 'ஆதி புருஷ். பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான ஓம் ராவத் இயக்கியுள்ள இதில் கீர்த்தி சனோன், சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சன்சிட் பல்ஹாரா, அன்கிட் பல்ஹாரா என சகோதரர்கள் இருவர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு .கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். ராமாயண காவியத்தை தழுவி உருவாகியுள்ள இந்த படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பான் இந்தியா மூவியாக தயாராகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...ராஜமாதா சிவகாமி தேவியின் அழகிய கிக் போஸ்கள்...வயதான அடையாளமே இல்லையே!
prabhas
தற்போது ’ஆதி புருஷ்’ டீஸர் குறித்து பிரபாஸ் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.டீஸர் குறித்து பேசியுள்ள நாயகன், ,” ‘ஆதி புருஷ்’ டீஸரை முதன்முதலில் 3டி’ எஃபெக்டில் பார்த்தபோது ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த டீஸரை ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்.
prabhas
இது நிச்சயமாக திரையரங்குகளில் காணவேண்டிய ஒரு படம். இப்படத்திற்காக உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டிக்காத்திருக்கும் அதேவேளை அடுத்த 10 தினங்களுக்கு இப்படம் குறித்து பல சர்ப்ரைஸான கண்டெண்டுகளை வழங்கவிருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...குட்டை உடையுடன் வெளிநாட்டில் கலக்கும் திவ்யபாரதி ..கூல் கிளிக் இதோ