சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து... மின்னல் வேகத்தில் களத்தில் இறங்கிய மீனா! வைரலாகும் புகைப்படம்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து, நடிகை மீனா டப்பிங் பணிகளை மேற்கொண்டு வரும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற படப்பிடிப்பில் பங்கேற்றார்.
அப்போது படக்குழுவை சேர்ந்த சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்றே வந்த போதும், ரத்த அழுத்தமாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் சிகிச்சைக்கு பின் நலமடைந்து சென்னைக்கு திரும்பினார்.
வந்த மறு தினமே அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்த சூப்பர் ஸ்டார், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும், கடந்த ஏப்ரல் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு, ஒரேயடியாக படத்தை முடித்து கொடுத்து விட்டு சென்னை திரும்பிய கையேடு... முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா பறந்தார்.
பின்னர் சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய டப்பிங் பணிகளை தொடங்கியதாக கூறப்பட்டது. மயிலாப்பூரில் உள்ள டப்பிங் ஸ்டூடியோவில் ரஜினி டப்பிங் செய்து வருவதாக தகவல் வெளியானது.
meena
தற்போது இவரை தொடர்ந்து பிரபல நடிகை மீனா மின்னல் வேகத்தில் டப்பிங் பணியில் இறங்கியுள்ளார். இவர் டப்பிங் செய்யும் போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அண்ணாத்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படடத்தின் பணிகள் சூடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.