‘பார்ட் 2’ ஹீரோவாக மாறிய கார்த்தி... கைதி 2 முதல் சர்தார் 2 வரை கைவசம் இத்தனை படங்களா..!
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி நடிகர்களில் அதிகப்படியான ‘பார்ட் 2’ படங்களை கைவசம் வைத்துள்ளவர் என்றால் அது நடிகர் கார்த்தி தான்.
கோலிவுட்டில் இந்த ஆண்டு தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சக்சஸ்புல் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கார்த்தி. இந்த வருடம் அவர் நடிப்பில் வெளிவந்த விருமன், பொன்னியின் செல்வன் 1, சர்தார் ஆகிய மூன்று திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளன. இதனால் செம்ம ஹாப்பியாக உள்ளார் கார்த்தி.
தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் அதன் இரண்டாம் பாகம் எடுக்கும் கலாச்சாரம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அவ்வாறு இரண்டாம் பாகம் எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் வெற்றியடைவதில்லை. அவ்வாறு எடுத்து வெற்றிபெற்ற படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இருப்பினும் அந்த நடைமுறை தொடர்ந்து தான் வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நடிகர்களில் அதிகப்படியான இரண்டாம் பாக படங்களை கைவசம் வைத்துள்ளவர் என்றால் அது நடிகர் கார்த்தி தான். அவர் கைவசம் உள்ள பார்ட் 2 படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கைதி 2
கார்த்தி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் கைதி. அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அப்போதே அறிவித்துவிட்டனர். ஆனால் தற்போது தான் அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. அடுத்தாண்டு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.
இதையும் படியுங்கள்... சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமாவினால் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படும் 'குரங்கு பெடல்'..!
பொன்னியின் செல்வன் 2
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் வெளியானது. ரிலீசாகி ஒரு மாதம் ஆக உள்ள நிலையிலும், மவுசு குறையாமல் வசூலை வாரிக்குவித்து வரும் இப்படம் ரூ.500 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி விட்டது. அதனை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
சர்தார் 2
கார்த்தி கைவசம் உள்ள மற்றுமொரு பார்ட் 2 படம் சர்தார். தீபாவளி விருந்தாக ரிலீசான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தின் சக்சஸ் பார்ட்டி சமீபத்தில் நடந்தது. அதில் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்கிற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
ஆயிரத்தில் ஒருவன் 2
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன். கடந்த 2010-ம் ஆண்டு ரிலீசான இப்படம் வெளிவந்த சமயத்தில் தோல்வி படமாக அமைந்தது. ஆனால் தற்போது இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால் பார்ட் 2 எடுக்க உள்ளதாக செல்வராகவன் அறிவித்துவிட்டார். இதில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் அறிவித்த அவர் கார்த்தி இல்லாமல் இப்படம் தொடங்கப்பட வாய்ப்பில்லை என சமீபத்திய பேட்டியில் கூறினார். இதனால் இதிலும் கார்த்தி நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... நிவாஷினியிடம் அத்து மீறி அட்டகாசம் செய்யும் அசல்..! விட்டா நிஜமாவே கடிச்சு தின்னுடுவார் போல..! வைரல் வீடியோ..