- Home
- Cinema
- Karthi : ஒரே நாளில் 3 படங்கள் ரிலீஸ்... மூனுமே வேறலெவல்! - ஜாலி மூடில் நடிகர் கார்த்தி... வைரலாகும் டுவிட்
Karthi : ஒரே நாளில் 3 படங்கள் ரிலீஸ்... மூனுமே வேறலெவல்! - ஜாலி மூடில் நடிகர் கார்த்தி... வைரலாகும் டுவிட்
karthi : குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்த நடிகர் கார்த்தி, தற்போது விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நடிகர் கார்த்தி, கடந்த 2007-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே திறம்பட நடித்து பாராட்டுக்களை பெற்றார் நடிகர் கார்த்தி. இப்படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது.
இதையடுத்து அவர் நடிப்பில் வெளியான பையா, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை, கொம்பன், தீரன் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்தார் கார்த்தி. இவர் நடிப்பில் தற்போது விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.
இதில் விருமன் படத்தை முத்தையா இயக்கி உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற ஜூன் மாதம் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதேபோல் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. இப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இதில் கார்த்தியுடன் திரிஷா, ஜெயம் ரவி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், விக்ரம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வருகிற செப்டம்பர் மாதம் இப்படம் ரிலீசாக உள்ளது.
தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், நடிகர் கார்த்தி தான் நடித்த 3 படங்கள் ஒரே நாளில் ரிலீசானது குறித்து நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, பையா திரைப்படம் என்னை புதிய தோற்றத்துக்கு மாற்றியது. கொம்பன் மூலம் என்னை 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கிராமத்து ரோலில் நடித்தேன். அதேபோல் சுல்தான் என்னை மீண்டும் குழந்தைகளை கவர் உதவியது. இந்த மூன்று திரைப்படங்களும் ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசானவை. இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... குவியும் பாலிவுட் பட வாய்ப்புகள்... மும்பையில் புது வீடு வாங்கும் சமந்தா - விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!