மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்... ஓய்வெடுக்க சொன்ன டாக்டர்கள்! அப்போ பிக்பாஸ் நிகழ்ச்சி?
லேசான காய்ச்சல் இருந்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று இரவு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐதராபாத் சென்று திரும்பிய அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதை அறிந்து ஷாக் ஆன ரசிகர்கள், அவருக்கு என்ன ஆச்சு என்று பதறிப்போய் இருந்தனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சைக்கு பின் தற்போது வீடு திரும்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ‘சிட்டிசன்’ கமல் நடிக்க வேண்டிய படம்.. அந்த வாய்ப்பு அஜித்துக்கு போனது எப்படி? - இயக்குனர் சொன்ன ஆச்சர்ய தகவல்
மேலும் ஓரிரு நாட்கள் ஓய்வெடுக்க கமலுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளார்களாம். ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்த பின்னர், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. இதுதவிர நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்று வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்களையும் தொகுத்து வழங்கி உள்ளார். இதற்கு முன் நடந்து முடிந்த 5 சீசன்களில் ஒரே ஒரு வாரம் தான் அவர் தொகுத்து வழங்கவில்லை. ஏனெனில் 5-வது சீசனின் போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அப்போது ஒரு வாரம் மட்டும் அவருக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... நான் முஸ்லீம், என் மனைவி பிராமணர்.. 3 முறை திருமணம் செய்துகொண்டது ஏன்? - ஜெயம் ரவியின் தந்தை சுவாரஸ்ய பேட்டி