விபத்தில் சிக்கிய தக் லைப் பட நடிகர் ஜோஜு ஜார்ஜ்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
Joju George met with an accident in shooting Spot: பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் விபத்தில் சிக்கி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்பில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் விபத்து
மலையாளத்தில், நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என தனக்கென தனி முத்திரை பதித்துள்ளனர் ஜோஜு ஜார்ஜ். மலையாள மொழியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவரை தமிழில் 'ஜகமே தந்திரம்' படம் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். கடைசியாக தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'தக் லைப்' படத்திலும், முரட்டு வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்.
கவினின் காலை வாரிய 'கிஸ்'... இரண்டே நாளில் இவ்வளவு தான் வசூலா?
பணி, வரவு, ஜோஜூ ஜார்ஜ் விபத்து
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழியிலும் பிசியாக நடித்து வரும் ஜோஜு ஜார்ஜ், தற்போது படப்பிடிப்பில் விபத்தில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இவருடன் நடித்த நடிகர் தீபக் பாரம்போலும் விபத்தில் சிக்கியுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து 'வரவு' என்கிற படத்தில் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பில் சேசிங் காட்சி படமாக்கப்பட்டபோது, ஜோஜு ஓட்டிவந்த ஜீப் எதிர்பாராத விதமாக கவிழ்ந்துள்ளது.
ரேவதி உயிருக்கு ஆபத்து – யாரிடம் சொல்வது தவிக்கும் குறி சொல்லும் பாட்டி!
ஜோஜு ஜார்ஜ் விபத்து
இந்த விபத்தில் ஜோஜு ஜார்ஜ், தீபக் உட்பட துணை நடிகர்கள் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரையும், படக்குழுவினர் உடனடியாக மூணாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில்.... அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜோஜு ஜார்ஜ்
'வரவு' திரைப்படத்தை, ஷாஜி கைலாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முரளி கோபி, அர்ஜுன் அசோகன், நடிகை சுகன்யா, பாபுராஜ், வின்சி அலோஷியஸ், சானியா ஐயப்பன், அஷ்வின் குமார், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே போல் ஒரு விபத்தில் சிக்கி ஜோஜு ஜார்ஜ் மீண்ட நிலையில்... மீண்டும் மற்றொரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.