ரேவதி உயிருக்கு ஆபத்து – யாரிடம் சொல்வது தவிக்கும் குறி சொல்லும் பாட்டி!
கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு சாமுண்டீஸ்வரி தனது குடும்பத்தோடு வருகை தந்த நிலையில் ரேவதி உயிருக்கு ஆபத்து இருப்பதாக குறி சொல்லும் பாட்டி மனதில் நினைத்துக் கொண்டுள்ளார்.

கார்த்திகை தீபம் 2 சீரியல்
கார்த்திகை தீபம் 2 சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ரேவதியை கொல்ல மேற்கொண்ட முயற்சியில் அவருக்குப் பதிலாக மாயா, கான்ஸ்டபிளை கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து கார்த்திக் மற்றும் மயில்வாகனத்தின் சிறப்பான நாடகத்தால் மாயா கைது செய்யப்பட்டார். எனினும், அவர் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் எஸ்கே ஆகியுள்ளார். கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனக்கு தலைவலி இருப்பதாக கூறி டீ குடிக்க சென்றார். அவருடன் டிரைவர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் செல்ல, பெண் கான்ஸ்டபிளை மாயா நீங்களும் டீ குடிக்க செல்லுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டு எஸ்கே ஆகியுள்ளார்.
நவராத்தி விழா
அவர்களைப் பார்த்த மாயா, அவர்களைப் போன்று மஞ்சள் நிற புடவையில் வர திட்டம் போட்டார். இதற்காக கோயிலிலிருந்த மஞ்சள் நிற புடவையை எடுத்துக் கொண்டு சென்றார். இதற்கிடையில் கோயிலுக்குள் எப்படி குறி சொல்பவர்கள் இருப்பார்கள் என்ற கேள்வியுடன் அங்கிருந்த குறி சொல்லும் பாட்டியிடம் சுவாதி, ரோகிணி மற்றும் ரேவதி மூவரும் குறி கேட்டனர். இதில், சுவாதி திறமையாக பாடுவார். அவருக்கு பேரும், புகழும் கிடைக்கும் என்று சொன்னார். அதன் பின்னர் ரோகிணிக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றும், நல்லபடியாக பிறக்கும் என்றும் கூறினார்.
எஸ்கேப் ஆன மாயா
அவர் நேராக ஒரு தோட்டத்திற்கு வந்து அங்கு தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சாமுண்டீஸ்வரி சென்ற கோயிலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர்கள் அங்கு தான் இருக்கிறார்கள் என்பது ஜெயிலில் இருந்து தப்பித்து வந்த மாயாவிற்கு எப்படி தெரியும் என்பது புரியாத புதிர். கோயிலுக்கு வந்த மாயா ரேவதி மீது தனது கவனத்தை செலுத்தி குறி வைத்து சுட பார்த்தார். ஆனால், அவர் எஸ்கேப் ஆகிவிட்டார். இதைத் தொடர்ந்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் மஞ்சள் நிற புடவையில் முகம் முழுவதும் சந்தனம் பூசிக் கொண்டு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
ரேவதி உயிருக்கு ஆபத்து:
சுவாதி மற்றும் ரோகிணிக்கு சிரித்தபடியே குறி சொன்ன பாட்டியின் முகம் ரேவதியை பார்த்து முற்றிலும் மாறிவிட்டது. அவருக்கு தெரிந்துவிட்டது. ஆயுள் ரேகைக்கு குறுக்கில் வெட்டு இருக்கிறது. இந்த கண்டத்திலிருந்து அவர் எப்படியாவது தப்பிக்க வேண்டும். அப்படி அவர் தப்பித்துவிட்டால் கணவருடன் சேர்ந்து நன்றாக வாழ்வார் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார். மேலும், இதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்றார். ஆனால், இதைப் பற்றி ரேவதி, சுவாதி மற்றும் ரோகிணி ஆகியோரிடம் அவர் சொல்லவில்லை.
ரேவதியை கொலை செய்ய வந்த மாயா
ஏற்கனவே ரேவதியை கொலை செய்ய மாயா கோயிலுக்குள் இருக்கும் நிலையில் குறி சொல்லும் பாட்டி மனதிற்குள் நினைத்தபடி ரேவதி உயிருக்கு ஆபத்து வருமா? அல்லது கார்த்திக் அவரை காப்பாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும், ரேவதி வீட்டிலிருந்து புறப்படும் போது கால் இடறியது. இதனை அபசகுணம் என்று கருதினர். இது ஒரு புறம் இருந்தாலும் இன்றைய நாள் முழுவதும் கார்த்திக்கை தன்னுடன் இருக்க வேண்டும் என்று ரேவதி கூறியிருக்கிறார்.
ரேவதிக்கு டப்பிங் குரல் சரியில்லை
இதுவரையில் ரேவதிக்கு வேறொரு குரல் பின்னணி குரலாக கொடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய எபிசோடில் அவருக்கு கொடுக்கப்பட்ட பின்னணி குரல் மாற்றப்பட்டுள்ளது. இதுவரையில் கேட்டு வந்த குரல் அவருக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால், நேற்றைய எபிசோடில் கேட்ட குரல் பெரிதாக ஈர்க்கவில்லை. இனி நாளை நடக்கும் எபிசோடில் ரேவதி உயிருக்கு ஆபத்து ஏற்படுமா? அல்லது கார்த்திக் அவரை காப்பாற்றுகிறாரா என்பது பற்றி பார்க்கலாம்.
கார்த்திக்கை கண்காணிக்க சாமுண்டீஸ்வரி ஏற்பாடு
இதற்கிடையில் கார்த்திக்கை கண்காணிக்க உளவுத்துறையை நியமித்துள்ளார் சாமுண்டீஸ்வரி. இன்னும் 10 நாட்களுக்குள் கார்த்திக் யார், அவர் உண்மையிலேயே ராஜா சேதுபதியின் பேரனா என்பதை கண்டுபிடித்து உங்களிடம் சொல்கிறோம் என்று அவர்களும் வாக்குறுதி அளித்துள்ளனர். இந்த வாரம் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.