- Home
- Cinema
- Nayanthara: நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க சீட்டு குலுக்கி தேர்வு செய்யப்பட்ட ஹீரோ! யார் தெரியுமா
Nayanthara: நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க சீட்டு குலுக்கி தேர்வு செய்யப்பட்ட ஹீரோ! யார் தெரியுமா
நடிகர் ஜீவா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க தன்னுடைய பெயரையும் மற்றொரு ஹீரோவின் பெயரையும் சீட்டில் எழுதி போட்டு தயாரிப்பாளர் தேர்வு செய்ததாக கூறியுள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ஜீவா 2009-ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் நடித்த ரொமான்டிக் காமெடி படம் தான் 'சிவா மனசுல சக்தி'. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அனுயா நடிக்க, சந்தானம், ஊர்வசி, ஞானசம்பந்தம், சத்யன், உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். ஆர்யா மற்றும் ஷகிலா இருவரும் கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.
சிவா மனசுல சக்தி:
இளம் ரசிகர்களை குறி வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தின் கதைக்களமும், காமெடியும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் நடிகர் ஜீவாவுக்கு கமர்சியல் வெற்றியையும் இந்த படம் பெற்று தந்தது. இந்த படத்தை தொடர்ந்து, ராஜேஷ் 2010-ஆம் ஆண்டு ஆர்யாவை வைத்து இயக்கிய திரைப்படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. இந்த படத்தையும் ரொமான்டிக் காமெடி ஜார்னரில் தான் இயக்கி இருந்தார்.
ஆர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்:
இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் சந்தானம் ஆர்யாவின் நண்பராக படம் முழுவதும் பயணிக்க கூடிய முக்கிய ரோலில் நடித்திருந்தார். மேலும் சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், ராஜேந்திரான், அஸ்வின் ராஜா, விஜயலட்சுமி, லட்சுமி ராமகிருஷ்ணன், லொள்ளு சபா சாமிநாதன், உள்ளிட்ட பலர் நடிக்க... ஜீவா மற்றும் சகிலா இருவரும் கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.
மீண்டும் ‘தல தளபதி’யாக மாறும் சந்தானம்... ‘பாஸ் என்கிற பாஸ்கரன் 2’ படத்தின் டக்கரான அப்டேட் இதோ
சீட்டில் எழுதி போட்டு ஹீரோவை தேர்வு செய்த தயாரிப்பாளர்:
இந்த படத்தில் ராஜேஷின் முதல் பட ஹீரோவான ஜீவாவை, கதாநாயகனாக நடிக்க வைக்கலாம் என தயாரிப்பாளர் கூறியுள்ளார். ஆனால் ராஜேஷ் ஆர்யாவை மனதில் வைத்தே இந்த கதையை எழுதியதாக கூறியுள்ளார். ஆர்யா - ஜீவா ஆகிய இருவருமே இந்த கதையில் நடிக்க ஓகே சொன்ன நிலையில், பின்னர் இந்த ரோலுக்கு இருவருமே நன்றாக இருக்கும் என எண்ணிய தயாரிப்பாளர், இருவருடைய பெயரையும் சீட்டில் எழுதி போட்டு தேர்வு செய்யலாம் என முடிவு செய்தாராம்.
ஜீவா பகிர்ந்த சீக்ரெட்:
அப்படி ஜீவா மற்றும் ஆர்யா பெயரை சீட்டு எழுதிப் போட்டு எடுத்ததில் ஆர்யாவின் பெயர் வந்துள்ளது. இதை தொடர்ந்து நயன்தாராவுக்கு ஜோடியாக 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் ஆர்யா நடித்துள்ளார். இந்த சீக்ரெட்டை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகர் ஜீவா பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.