- Home
- Cinema
- சூப்பர் ஸ்டார் மருமகன்னா சும்மாவா?... ஹாலிவுட்டில் “அவெஞ்சர்ஸ்” இயக்குநருடன் கரம் கோர்க்கும் தனுஷ்...!
சூப்பர் ஸ்டார் மருமகன்னா சும்மாவா?... ஹாலிவுட்டில் “அவெஞ்சர்ஸ்” இயக்குநருடன் கரம் கோர்க்கும் தனுஷ்...!
“தி கிரே மேன்” படத்தை அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய அந்தோணி மற்றும் ஜோ ரூசோ இயக்க உள்ளனர்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ என அடுத்தடுத்து படங்களை முடித்துவிட்டு, தற்போது இந்தியில் அட்ரங்கி ரே படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு முன்னதாக தனுஷை வைத்து ‘ராஞ்ஜனா’ என்ற படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இதில் அக்ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார்.

தற்போது நெட் பிளிக்ஸ் தயாரிக்கும் “தி கிரே மேன்” என்ற படத்தில் தனுஷ் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மார்க் கிரேனியின் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ள ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் தனுஷுடன் ஜெசிக்கா ஹென்விக், வாக்னர் மோரா, கிறிஸ் இவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டி ஆர்மஸ் ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

“தி கிரே மேன்” படத்தை அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் என அழைக்கப்படும் அந்தோணி மற்றும் ஜோ ரூசோ இயக்க உள்ளனர். இதில் தனுஷின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சக்கணக்கான தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் படத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளதால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த படம் மூலமாக தனுஷ் இரண்டாவது முறையாக ஹாலிவுட்டில் கால் பதிப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.