மாஸ் ஹீரோவை மடியில் அமர வைத்திருக்கும் MGR... இந்த சிறுவன் யார் என்று தெரிகிறதா?
புரட்சி தலைவர் எம்ஜிஆர் மடியில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த நடிகர் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Tamil Actor Childhood Photo
சினிமாவில் லக் ரொம்ப அவசியம் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த நடிகர் தான். இவர் தனது 18 வயதிலேயே சினிமாவில் நடிகராக அறிமுகமான போதும், அவரால் வெற்றிகரமான நடிகராக ஜொலிக்க முடியவில்லை. இருப்பினும் சுமார் 20 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்னரே அவருக்கு மாஸ் வெற்றி கிடைத்தது. அதன்பின்னர் அவர் தொட்டதெல்லாம் ஹிட் அடிக்கத் தொடங்கியது. தற்போது 48 வயதாகும் அந்த நடிகர், தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என எந்த ரோல் கொடுத்தாலும் அதில் தூள் கிளப்பி வருகிறார். அந்த நடிகர் யார் என்பது கிட்டத்தட்ட கணித்திருப்பீர்கள்.
எம்ஜிஆர் மடியில் இருக்கும் ஹீரோ யார்?
அவர் வேறுயாருமில்லை நடிகர் அருண் விஜய் தான். அவரைத் தான் எம்ஜிஆர் தன்னுடைய மடியில் தூக்கி வைத்திருக்கிறார். அருண் விஜய் சிறுவயதில் எடுத்த இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அருண் விஜய்யின் தந்தை விஜயகுமார் தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்தவர் என்பதால், அவருடன் எம்ஜிஆரை சந்தித்தபோது, அருண் விஜய்யை மடியில் உட்கார வைத்திருக்கிறார் எம்ஜிஆர். இந்த பாக்கியம் வெகுசிலருக்கும் மட்டுமே கிடைத்திருக்கிறது. அதில் அருண் விஜய்யும் ஒருவராக இருக்கிறார்.
அருண் விஜய் சினிமா பயணம்
நடிகர் அருண் விஜய் கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த முறை மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகராக அறிமுகமாகி 6 ஆண்டுகள் கழித்து தான் அவருக்கு முதல் வெற்றி கிடைத்தது. இவர் நடித்து முதன்முதலில் வெற்றிபெற்ற படம் பாண்டவர் பூமி. சேரன் இயக்கிய இப்படத்தில் இன்ஜினியராக நடித்திருந்தார் அருண் விஜய். இதன்பின்னர் 2003-ல் வெளிவந்த இயற்கை படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்திருந்தார். அப்படமும் ஹிட் அடித்தது. இதையடுத்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இவர் நடித்த படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக தோல்வியை தழுவின.
கம்பேக்
அதன்பின்னர் கடந்த 2012-ம் ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த தடையறத் தாக்க திரைப்படம் அருண் விஜய்யை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது. பின்னர் 2015-ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடித்த விக்டர் கதாபாத்திரம் அவருடைய கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்னர் செக்கச் சிவந்த வானம், மாஃபியா போன்ற படங்களிலும் வில்லனாக மிரட்டி இருந்தார்.
பிசியான ஹீரோ
என்னை அறிந்தால் படத்துக்கு பின்னர் வில்லனாக மட்டுமின்றி ஹீரோவாகவும் இவர் நடித்த குற்றம் 23, தடம், யானை ஆகிய படங்கள் மாஸ் வெற்றியை ருசித்தன. கடந்த ஆண்டு மட்டும் அருண் விஜய் நடிப்பில் வணங்கான், இட்லி கடை, ரெட்ட தல என மூன்று திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. தற்போது அவர் நடிப்பில் புது படம் ஒன்று தயாராகி வருகிறது. அப்படத்தை கொம்பன் பட இயக்குநர் முத்தையா இயக்குகிறார். அப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

