ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடி... ரத்த தானம் செய்த அருண் விஜய்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் இன்று, தன்னுடைய 45 ஆவது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடினார்.
தமிழ் சினிமாவில், வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு... அறிமுகமானாலும், பின்னர் தன்னுடைய திறமையால், சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டுள்ளார் அருண் விஜய்.
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, இருக்கும் நடிகர் அருண் விஜய் இன்று தன்னுடைய பிறந்த நாளை, உதவும் கரங்கள் ஆதரவற்றவோர் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரது மகன், மகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். குழந்தைகள் முன்பு கேக் வெட்டி அவர்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார்.
பின்னர் குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்... அவர்களுடன் சேர்ந்து மதிய உணவை சாப்பிட்டார். முன்னணி நடிகராக இருந்தும் இவர் மிகவும் எளிமையாக பழகி, சின்னசிறு குழந்தைகளுடன் உணவு அருந்தியது பார்பவர்களையே ஆச்சரியப்படுத்தியது.
அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். அங்கு ரசிகர்களுடன் இணைந்து தானும் இரத்த தானம் செய்தார்.
நடிகர் அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக கலந்துகொள்ள இராயப்பேட்டையிலுள்ள அரசு மருத்துவமனை இரத்த வங்கியில், ரத்த தானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.