உலகிலேயே யாரும் செய்யாத... புது பிசினஸை தொடங்கி தொழிலதிபர் ஆனார் அர்ஜுன் மகள் அஞ்சனா -அப்டி அதுல என்ன ஸ்பெஷல்?
Anjana Arjun : மூத்த மகள் ஐஸ்வர்யாவை ஹீரோயினாக்கிய அர்ஜுன், தற்போது அவரது இரண்டாவது மகள் அஞ்சனாவை தொழிலதிபர் ஆக்கி உள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வந்தவர் அர்ஜுன். தமிழ்சினிமாவில் பல்வேறு வெற்றிப்படங்களில் நாயகனாக நடித்துள்ள இவர், சமீப காலமாக வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அடுத்ததாக இவர் விஜய்யின் தளபதி 67 படத்தில் கூட வில்லனாக நடிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
நடிகர் அர்ஜுன், கடந்த 1988-ம் ஆண்டு நடிகை நிவேதிதாவை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் ஹீரோயினாக வலம் வருகிறார். இவர் தமிழிலும் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை என்கிற படத்தில் நடித்தார். அதன்பின் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுவிட்டார்.
இதையும் படியுங்கள்... 20 ஆண்டுகளில் 25 படங்களில் மட்டுமே நடித்தது ஏன்? - பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சீக்ரெட்டை சொன்ன ஜெயம் ரவி
மூத்த மகளை ஹீரோயினாக்கிய அர்ஜுன், இளைய மகள் அஞ்சனாவை சினிமா பக்கம் கொண்டுவரவில்லை. இதற்கு காரணம் அவருக்கு சினிமா மீது சுத்தமாக ஆர்வம் இல்லையாம். இந்நிலையில், தற்போது தொழிலதிபராக அவதாரம் எடுத்துள்ளார் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா. அதன்படி தற்போது ஹேண்ட் பேக்குகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.
இதில் என்ன ஸ்பெஷல் என்றால், அந்த ஹேண்ட் பேக்குகள் அனைத்தும் பழ தோல்களைக் கொண்டு உருவாக்கி அதனை விற்பனை செய்கிறார். உலகிலேயே அத்தகைய முறையில் தயாரித்து விற்பனை செய்யும் முதல் நிறுவனமாக அஞ்சனாவில் சர்ஜா நிறுவன்ம் விளங்கி வருவதாக கூறப்படுகிறது. ஐதராபாத்தில் நடந்த இந்நிறுவனத்தின் தொடக்க விழாவில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார். அர்ஜுன் மகளின் இந்த பிசினஸ் சக்சஸ்புல் ஆக வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... அதிர்ச்சி.. 20 மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன் மகள்! என்ன ஆச்சு? அவரே கூறிய தகவல்!