கடனா இல்ல, நன்கொடையா வச்சுக்கோங்க.. நடிகர் சங்க கட்டிடம் - அள்ளிக்கொடுத்த "த.வெ.க" தலைவர் விஜய்!
Nadigar Sangam : கோலிவுட் நடிகர் சங்க கட்டிடம் இன்னும் முழுமையாக முடிக்கப்படாத நிலையில், அதில் நிதி பிரச்சனை இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
Hema Committee Report
கேரள திரையுலகை உலுக்கி வரும் "ஹேமா கமிட்டி அறிக்கை", தமிழ் திரையுலகிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே கூறலாம். தொடர்ச்சியாக பல நடிகைகள் இதுகுறித்து பேசி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழ் திரையுலகில் பாலியல் ரீதியான அட்ஜஸ்ட்மென்ட் போன்ற விஷயங்களை முழுமையாக அகற்ற, முக்கிய பல முடிவுகள் இன்று நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு மீட்டிங்கில் விவாதிக்கப்பட்டது.
அதில் பல புதிய விதிகள் அறிமுகம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் போன்ற பாலியல் தொல்லைகள் கொடுக்கும் நபர்கள் மீது அளிக்கப்படும் புகார்கள் நிரூபிக்கப்பட்டால், திரை உலகில் பயணிக்க அவர்களுக்கு ஐந்தாண்டு வரை தடை விதிக்கப்படும் என்றும், யூட்யூப் தலங்களில் சினிமா பிரபலங்கள் பற்றி ஆதாரமே இல்லாமல் வீண் வதந்திகளையும், அவர்களுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசும் நபர்கள் மீது, சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க, குறிப்பிட்ட அந்த பிரபலத்திற்கு தேவையான உதவிகள் அனைத்தையும் நடிகர் சங்கம் செய்து தரும் என்றும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Actor Karthik
மேலும் இந்த சங்க பொதுக்குழு கலந்தாய்வில், நடிகர் கார்த்தி நடிகர் சங்க கணக்கு வழக்குகளை ஒப்படைத்து அது குறித்து பொதுகுழுவில் பல விஷயங்களை பேசியுள்ளார். குறிப்பாக நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக சுமார் 25 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கப்பட்டதாகவும், இந்த கடனை அடைப்பதற்காக தொடர்ந்து நிதி திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். விஜய், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்கள் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் பணம் தந்து உதவியுள்ளதாகவும் கூறினார் நடிகர் கார்த்திக்.
அதே நேரம் மேலும் அதிகமாக நிதி திரட்டுவதற்கு தனியாக ஒரு கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டதல்லதாகவும் கூறினார். இந்த கலை நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறிய நடிகர் கார்த்திக், விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது தான் இப்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை தாமதப்படுத்தி இருப்பதாகவும். இதனால் ஏற்படும் நிதிச் சுமையை அதிகப்படுத்தி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
Vijayakanth
இதற்கு முன்னதாக பல சமயங்களில் இது போன்ற இக்கட்டண சூழலை சந்திக்கும்போது, தமிழக நடிகர் சங்கம் பல கலைநிகழ்ச்சிகளை நடித்தி அந்த பிரச்னையை சரிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது தான் பெரிய அளவில் மலேஷியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இதுபோன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுஒருபுரம் இருக்க, தான் வழங்கிய ஒரு கோடி ரூபாய் நிதியை கடனாக இல்லாமல், அதை தான் தரும் நன்கொடையாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று நடிகர் விஜய் கூறியதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் நேற்றைவிட இன்று அதிக அளவில் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகின்றது. குறிப்பாக இன்னும் சில நாள்களில் தமிழகத்தில் மட்டும் 200 கோடி வசூலை அந்த திரைப்படம் எட்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Actor Vijay
விரைவில் தனது 69வது திரைப்பட பணிகளை துவங்க உள்ள நடிகர் விஜய், அதற்கு முன்னதாக விக்கிரவாண்டியில் நடைபெறும் தனது தமிழக வெற்றிக்கழக கட்சியின் மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார். பிறகு தனது இறுதி திரைப்பட பணிகளை முடிக்கும் அவர், முற்றிலுமாக திரைத்துறையில் இருந்து ஓய்வு பெற்று முழுநேர அரசியல் தலைவராக பணியாற்ற இருக்கிறார். இது மட்டுமல்ல, வருகின்ற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், தனது தமிழக வெற்றிக் கழக கட்சியின் சார்பாக முதல்வர் வேட்பாளராக அவர் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாலிப கவிஞரின் வார்த்தை விளையாட்டு; ஒரே வரியை 4 பாடல்களில் பயன்படுத்திய வாலி! நாளுமே சூப்பர் ஹிட்!