Vettaiyan First Single : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.

ஜெயிலர் திரைப்பட வெற்றிக்கு பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இமயமலை பயணத்தை மேற்கொண்டார். அந்த ஆன்மீக பயணங்களை முடித்த அவர் கடந்த ஆண்டு இறுதியில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் "வேட்டையன்" என்கின்ற தனது 170வது திரைப்பட பணிகளை துவங்கினார். திருநெல்வேலி அருகே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது தான், சூப்பர் ஸ்டாரின் மிக நெருங்கிய நண்பரும், தமிழ் சினிமாவின் கேப்டனுமான விஜயகாந்த் காலமானார். 

உடனடியாக தனது "வேட்டையன்" திரைப்படப் பணிகளை நிறுத்திவிட்டு, அவர் சென்னை விரைந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சில வாரங்கள் கழித்து மீண்டும் தனது "வேட்டையன்" திரைப்பட பணிகளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கினார். சுமார் 8 மாத கால பணிகளுக்குப் பிறகு, கடந்த வாரம் தான் வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாலிப கவிஞரின் வார்த்தை விளையாட்டு; ஒரே வரியை 4 பாடல்களில் பயன்படுத்திய வாலி! நாளுமே சூப்பர் ஹிட்!

வருகின்ற அக்டோபர் மாதம் 10ம் தேதி உலக அளவில் "வேட்டையன்" திரைப்படம் வெளியாக உள்ள அதே நாளில் பிரபல நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படமும் வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிக மூத்த நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தங்களுடைய திரைப்படத்தை வெளியிடுவது அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது என்று, நடிகர் சூர்யாவும், கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேலும் எண்ணிய நிலையில், இப்போது அக்டோபர் 10 என்கின்ற தேதியில் இருந்து கங்குவா விலகி உள்ளது. விரைவில் அந்த திரைப்படம் தனியாக ஒரு சிறப்பான நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த சூழலில் வேட்டையன் திரைப்படத்திலிருந்து முதல் அப்டேடாக நாளை, "மனசிலாயோ" என்கின்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. இந்நிலையில் அந்த பாடலின் புரோமோ ஒன்று இப்போது வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த பாடலை சிறப்புள்ளதாக மாற்ற, மறைந்த மெகா ஹிட் பாடகர் ஒருவருடைய குரலை, இசையமைப்பாளர் அனிருத் பயன்படுத்தியிருக்கிறார். அது குறித்த ஒரு வீடியோவையும் இப்போது வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டு இருக்கிறது. 

Scroll to load tweet…

தமிழ் திரையுலகில் மறக்க முடியாத பாடகர்களில் மலேசியா வாசுதேவனும் ஒருவர், இந்நிலையில் சுமார் 27 ஆண்டுகள் கழித்து அவருடைய குரல் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு AI மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனிருத் இசையில் "வேட்டையன்" படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான "மனசிலாயோ" நாளை மாலை வெளியாகும் நிலையில் அதனுடைய புரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது. லெஜென்டாரி பாடகர் மலேசியா வாசுதேவன் கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி காலமானார்.

முதல்வன் படத்தில் வரும் புகார் பெட்டி ஞாபகமிருக்கா! அதில் ஒட்டிய ஸ்டிக்கருக்கு பின்னணியில் இப்படியொரு வரலாறா!!