நடிகர் ரவி மரியா பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கி பண மோசடி! நடிகர் காவல் நிலையத்தில் புகார்!
பிரபல இயக்குனரும், நடிகருமான ரவி மரியா, தன்னுடைய பெயரில் போலியாக இன்ஸ்டாகிராம் பக்கம் ஓப்பன் செய்து, யாரோ சில பணம் கேட்டு மோசடி செய்வதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி, பின்னர் ஜீவா நடித்த 'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவி மரியா. இவரின் முதல் படத்திற்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, நட்டி நடராஜ் நாயகனாக நடித்த மிளகா படத்தையும் இயக்கி இருந்தார்.
இந்த இரு படங்களை தொடர்ந்து, ரவி மரியா படம் இயக்கவில்லை என்றாலும், நடிப்பில் படு பிஸியாகியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் இவர் நடிப்பில் இடியட், ஹாஸ்டல், காட்டேரி, குருமூர்த்தி, ஓ மை கோஸ்ட் ஆகிய படங்கள் வெளியானது. இந்த ஆண்டும் பல படங்கள் வெளியாக உள்ளனர்.
திமுக IT WING செயல்பாட்டில் ஒரு புதிய மைல் கல்! உலக அளவில் TREND ஆனது #HBDMKStalin70!
இந்நிலையில் இவர் சைபர் கிரைம் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். ரவி மரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை போலவே போலியாக உருவாக்கி, அவரின் நண்பர்களின் நட்பு பட்டியலை இணைத்து மோசடி செய்வதாக புகார் அளித்துள்ளார் .
இன்ஸ்டாகிராம் மூலம் பண உதவி கேட்டு பலரை மோசடி செய்ய முயல்வதாகவும், இது குறித்து நடிகர் ரவி மரியா தனது சமூக வலைதள பக்கத்தில் எச்சரிக்கையும் விடுத்துள்ளது மட்டும் இன்றி, இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல சைபர் கிரைப் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.