இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறதா AK61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்? வெளியான பரபரப்பு தகவல்!
அஜித் தற்போது நடித்து வரும் AK 61 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இன்று மாலை வெளியாகும் என ஒரு தகவல் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தை தொடர்ந்து, அஜித் நடித்து வரும் ஏகே 61-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்த நிலையில், அஜித் பைக் பயணமாக இமயமலைக்கு ட்ரிப் மேற்கொண்டார். எனவே பட குழுவினர் அடுத்த கட்ட படபிடிப்புக்கு தேவையான பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து அஜித் ஒரு வழியாக சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பைக் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய நிலையில், தற்போது நடித்து வரும் 61வது படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி, இந்த படத்தின்இறுதி கட்ட படபிடிப்புக்காக தற்போது பட குழுவினர் பாங்காங் செல்ல உள்ளதாகவும், ஏற்கனவே பட குழுவை சேர்ந்தவர்கள் பாங்காங் சென்றுவிட்ட நிலையில், இந்த படத்தின் நாயகனான அஜித்தும், நடிகை மஞ்சுவாரியாரும் நாளை அல்லது நாளை மறுநாள் பாங்காங் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: 2 கிட்னியும் செயலிழந்துவிட்டது! ICU-வில் பிரபல காமெடி நடிகர்! சிகிச்சைக்கு உதவுங்கள் கதறிய நடிகர் பெஞ்சமின்!
நீண்ட நாட்களாக ஏகே 61வது படத்தின், அப்டேட் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், அஜித் ரசிகர்கள் நேரடியாகவே ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் எப்போது வெளியாகும் என போனி கபூரிடமே கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும், டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளியாய்க்கியுள்ளது.
அதன்படி இன்று மாலை 6:00 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு துணிவே துணை என்று பெயர் வைத்துள்ளதாக பட குழுவினரிடம் இருந்து ஒரு தகவல் கசிந்த நிலையில், இது உண்மையா அல்லது வதந்தியா என்பது இன்று மாலை 6:00 மணிக்கு தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: லேடி சூப்பர்ஸ்டார்னா சும்மாவா... ரிலீசுக்கு முன்பே 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நயன்தாரா படம்