Ajith Kumar Bike Trip: தாய்லாந்தில் பைக்கில் சீறி பாய்ந்த அஜித்..! வேற லெவலுக்கு மாஸ் காட்டிய புகைப்படம்..!
அஜித், சமீபத்தில் 'துணிவு' படப்பிடிப்பிற்காக, தாய்லாந்து சென்ற நிலையில் அங்கு பைக் ரைடிங் செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
'துணிவு' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது முதலே... பைக் ரைடிங் அதிக ஆர்வம் காட்டி வரும் அஜித், உலகம் முழுவதும் பைக்கில் சுற்றி வர வேண்டும் என்கிற கொள்கையோடு பைக் பயணம் செய்து வருகிறார். நடிகர் அஜித்துக்கு பைக்கில் உலகையே சுற்றிவர வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக உள்ளது. அதன் முன்னோட்டமாக சமீபத்தில் ஐரோப்பா மற்றும் லண்டனுக்கு சென்று அங்கு தனது நண்பர்களுடன் பைக் ட்ரிப்பும் சென்றிருந்தார்.
இதை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில், இமயமலை பகுதிகளில் பைக் ரைடு செய்தார். ஹரித்துவார், கேந்தார்நாத் போன்ற பகுதிகளுக்கு சென்ற அஜித், தன்னுடைய ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களும், சமூக வலைத்தளத்தில் வைரலானது.
மேலும் செய்திகள்: விரைவில் ரகுல் பிரீத் சிங்கிற்கு டும்.. டும்.. டும்.! அட அவரும் ஒரு பிரபலமா..? சகோதரர் வெளியிட்ட சூப்பர் தகவல்
அதே போல், இந்த பைக் ட்ரிப் பயணத்தின் போது.. ரசிகர்களுக்கு உதவிகள் செய்தது, அவர்களுடன் டீ குடித்து, அஜித்தை பார்க்க சில ரசிகர்கள் பைக் பயணம் செய்து அவரை சந்தித்தது போன்ற பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்தது.
இமயமலை பைக் ட்ரிப்பை முடித்ததும், அஜித் மீண்டும்... 'துணிவு' படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்ற நிலையில், படப்பிடிப்பு முடிந்து படக்குழு இந்தியா திரும்பிவிட்ட போதிலும், அஜித் மீண்டும் தன்னுடைய பைக் பயணத்தை கையில் எடுத்துள்ளார்.
மேலும் செய்திகள்: தளபதி தந்தைக்கு இந்த நிலையா? ஹரித்துவாரில் ரிக்ஷா ஓட்டிய எஸ். ஏ.சந்திரசேகர்! வைரலாகும் புகைப்படம்!
தாய்லாந்து பகுதிகளில் உள்ள காடு, மேடு, நீர் நிலைகள் போன்ற பகுதிகளில் அஜித் சீறி பாய்ந்து செல்லும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தில் பைக் ட்ரிப்பை முடித்த கையேடு அஜித் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: Sneha Photos: 40 வயதை கடந்தாலும் மங்காத அழகு..! கணவரை கட்டி பிடித்து... குடும்பத்துடன் குதூகலம் பண்ணும் சினேகா
அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டப்பிங் பணிகளில் அஜித் இந்தியா வந்த பின்னர் கவனம் செலுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.