மாமனார் இடத்தில் மருமகள்... பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக மூன்றே நாளில் சமந்தா செய்த தரமான சம்பவம்...!
ஆனால் ஸ்பெஷல் ட்ரீட்டாக நாகார்ஜுனாவின் மருமகள் சமந்தாவே அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
தெலுங்கில் பிக்பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆரும், 2வது சீசனை நானியும் தொகுத்து வழங்கினர். 3வது சீசனை நாகார்ஜுனா தொகுத்து வழங்கிய நிலையில், சமீபத்தில் ஒளிபரப்பாகி வரும் 4வது சீசனையும் அவரே தொகுத்து வழங்கி வந்தார்.
இதனிடையே நாகார்ஜுனாவிற்கு ஒயில்ட் டாக் படப்பிடிப்பு பணிகள் இருந்ததால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்களுக்கு விடுப்பு எடுத்துள்ளார்.
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகை ஒருவர் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ரம்யா கிருஷ்ணன், ரோஜா என பலரது பெயரும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் ஸ்பெஷல் ட்ரீட்டாக நாகார்ஜுனாவின் மருமகள் சமந்தாவே அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தற்போது சமந்தா தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்ச்யை சமந்தா தொகுத்து வழங்கி வருகிறார்.
சமந்தாவிற்கு ஒரு பக்கம் ஆதரவு குவிந்து வந்தாலும் அவர் தொகுத்து வழங்குவது சரியில்லை. வேறு யாரையாவது மாற்றுங்கள் என ஒருதரப்பு கொந்தளித்து வருகிறார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்ததே இல்லை என சொல்லி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் சமந்தா. என்ன மருமகள் இவங்க மாமனார் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கூட பார்க்க மாட்டாங்களா? என சாட ஆரம்பித்தனர்.
ஆனால் சமந்தாவோ பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு முன்பாக வெறும் மூனே நாளில் அதற்கு முன்பு ஒளிபரப்பான அனைத்து எபிசோட்களையும் பார்த்துவிட்டாராம்.
பழைய கதை எல்லாம் தெரியாமல் எப்படி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியும், யார் எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்தாராம்.