MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 96 Part 2: '96' படத்தின் பார்ட் 2 கதையை கேட்டு 5 பவுன் தங்கத்தை அள்ளிக்கொடுத்த தயாரிப்பாளர்!

96 Part 2: '96' படத்தின் பார்ட் 2 கதையை கேட்டு 5 பவுன் தங்கத்தை அள்ளிக்கொடுத்த தயாரிப்பாளர்!

'96' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை கேட்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் பிரேம் குமாருக்கு 5 பவுன் தங்கத்தை பரிசாக அள்ளிக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

2 Min read
manimegalai a
Published : Mar 07 2025, 05:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோரது நடிப்பில் 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் 96. இந்தப் படம் அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

25
96 Movie Cast and Crew

96 Movie Cast and Crew

 இந்த படத்தில், கௌரி ஜி கிஷான், தேவதர்ஷினி, நியாட்டி கடம்பி, ஜனகராஜ், பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்த இந்தப் படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

 

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் மீண்டும் ஒரு 96! அதிரடியாக வந்த அப்டேட்
 

35
92 Second Part is Not Love Story

92 Second Part is Not Love Story

இந்த நிலையில் தான் 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி உள்ளார் இயக்குனர் பிரேம் குமார். ஆனால், முதல் பாகத்தை போல் இந்த படம் ஒரு காதல் கதையாக இருக்காது என ஏற்கனவே கூறியுள்ளார். இந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. 
 

45
Ishari K Ganesh Gifted Gold

Ishari K Ganesh Gifted Gold

96 படத்தின் 2ஆம் பாகத்திற்கான கதையை கேட்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கதையை கேட்ட அடுத்த நாளே இயக்குநரை அழைத்து அவருக்கு 5 பவுன் தங்க நகையை பரிசாக கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இப்படியொரு கதையை கேட்டதே இல்லை என்றும், இந்தப் படம் ஹிட் படமாக அமையும் என்றும் சொல்லியிருக்கிறார். இயக்குநர் பிரேம் குமார் 96 படம் மட்டுமின்றி, ஜானு என்ற தெலுங்கு படத்தையும் (96 ரீமேக்), மெய்யழகன் படத்தையும் இயக்கியிருக்கிறார். மெய்யழகன் படம் பெரியளவி ரீச் கொடுக்கவில்லை என்றாலும், கலவையான விமர்சனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

படமோ பிளாக்பஸ்டர் ஹிட்... ஆனா ஹீரோவா நடிச்ச விஜய் சேதுபதி ஒரு ரூபா கூட சம்பளம் வாங்கல - அடடே இந்த படமா!
 

55
96 Movie 2nd Part

96 Movie 2nd Part

கூடிய விரைவில் 96 படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும், முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி தான் இந்த படத்திலும் நடிக்க உள்ளாரா? என்பது பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
திரைப்படம்
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved