2023ல் அதிக லாபம் ஈட்டிய 7 இந்திய படங்கள்.. 3 தமிழ் படங்கள் லிஸ்டுல இருக்கு.. என்னென்ன தெரியுமா?
2023-ல் இந்திய அளவில் லாபகரமான 7 படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்த 7 படங்களில் 3 தமிழ் படங்கள் என்பது கூடுதல் சிறப்பு..
Leo Jailer
ஒவ்வொரு ஆண்டு நூற்றுக்கணக்கான திரைப்படங்களே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் போதிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக மாறுகின்றன. அந்த வகையில் 2023-ல் இந்திய அளவில் லாபகரமான 7 படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்த 7 படங்களில் 3 தமிழ் படங்கள் என்பது கூடுதல் சிறப்பு.. இதன் மூலம் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெறும் படங்களில் தென்னிந்திய படங்கள் அதிலும் குறிப்பாக தமிழ் படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை இது காட்டுகிறது.
PS 2 Movie Review
பொன்னியின் செல்வன் 2 :
பொன்னியின் செல்வன் பாகம் 1-ன் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி பொன்னியின் செல்வன் 2 வெளியானது. மணி ரத்னம் இயக்கிய இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஷ், ஜெயராம், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 250 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.344 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் மூலம் இப்படம் 2023-ம் ஆண்டின் அதிக லாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாக மாறி உள்ளது.
ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி (Rocky Aur Rani Kii Prem Kahaani) :
பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் இயக்கிய இந்த படம் இந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி வெளியானது. இந்த படத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட், ஜெயா பச்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், வசூல் ரீதியிலும் சாதனை படைத்தது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.357 கோடி வசூல் செய்தது. கிட்டத்தட்ட 2 மடங்கு லாபம் ஈட்டியதால் இந்த படம் இந்தியாவின் லாபகரமான படங்களில் இடம்பெற்றுள்ளது.
Leo movie
லியோ :
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியான படம் லியோ. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டின் என பலர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை முறியடித்து வருகிறது. ரூ. 250 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை உலகளவில் ரூ.544.5 கோடி வசூல் செய்து இந்தியாவின் லாபகரமான படங்களில் மாறி உள்ளது.
Rajinikanth starrer Jailer final collection report out
ஜெயிலர் :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான படம் ஜெயிலர். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மோகன் லால், ஷிவ் ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர். பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற இந்த படம் வசூலிலும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்தது. ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவான ஜெயிலர் படம் உலகளவில் ரூ.605.8 கோடி வசூல் செய்து மிகவும் லாபகரமான படமாக மாறி உள்ளது.
கடார் 2 :
2001-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான கடார் படத்தின் 2-ம் பாகமாக உருவான கடார் 2 கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியானது. அனில் ஷர்மா இயக்கிய இந்த படத்தில் சன்னி தியோல், அமீஷா படேல், உத்கரேஷ் ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் 2023-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறி உள்ளது. ரூ.85 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், உலகளவில் ரூ.687.8 கோடி வசூல் செய்து மிகப்பெரிய லாபம் கொடுத்த படமாக உள்ளது.
பதான் :
பாலிவுட் கிங் ஷாருக்கான் நடிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான பதான் இந்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி வெளியானது. தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், ஹிந்தி பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பல சாதனைகளை படைத்தது. ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகளவில் ரூ.1050.8 கோடி வசூல் செய்து இந்த ஆண்டின் மிகவும் லாபகரமான படங்களில் ஒன்றாக உள்ளது.
ஜவான் :
தமிழ் இயக்குனர் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமான படம் தான் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியா மணி, சன்யா மல்ஹோத்ர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்ததால் பல பாக்ஸ்சாதனைகளை இந்த படம் முறியடித்தது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.1145.4 கோடி வசூல் இந்தியாவின் அதிக வசூல் செய்த படங்களிலும், இந்தியாவின் அதிக லாபம் ஈட்டிய படங்களிலும் இடம்பெற்றுள்ளது.