69வது பிலிம்பேர் அவார்ட்ஸ் : விருதுகளை வென்று குவித்த சித்தா; ஏமாற்றம் அளித்த விடுதலை - முழு வின்னர்ஸ் லிஸ்ட்
69வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில், அதில் விருதுகள் வென்றவர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Filmfare Awards south 2024
தென்னிந்திய மொழிகளுக்கான பிலிம்பேர் விருதுகள் ஆண்டுதோறும் திறமைமிக்க சினிமா கலைஞர்களுக்காக வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 69வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. 69-வது பிலிம்பேர் விழாவில் விருது வென்ற பிரபலங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
Vikram, Nani, Siddharth at Filmfare Awards
சித்தாவுக்கு குவிந்த விருதுகள்
அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்ற சித்தா திரைப்படத்துக்கு அதிகளவில் விருதுகள் கிடைத்தன. சித்தா படத்துக்கு கிடைத்த விருதுகளின் விவரம் இதோ...
சிறந்த படத்துக்கான பிலிம்பேர் விருதை சித்தா வென்றுள்ளது.
சிறந்த நடிகர் (Critics) விருது சித்தா பட நாயகன் சித்தார்த்துக்கு வழங்கப்பட்டது.
சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை சித்தா படத்தின் கண்கள் ஏதோ பாடலை பாடிய கார்த்திகா வைத்தியநாதன் பெற்றுக்கொண்டார்.
சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது சித்தா பட நாயகி நிமிஷா சஜயனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகைக்கான விருதை சித்தா படத்தில் நடித்த அஞ்சலி நாயர் வென்றார்.
சிறந்த இயக்குனருக்கான விருதை சித்தா பட இயக்குனர் அருண்குமார் வென்றுள்ளார்.
சிறந்த இசை ஆல்பத்திற்கான விருதும் சித்தா படத்துக்கு தான் கிடைத்தது. சந்தோஷ் நாராயணன் மற்றும் திபு நினன் தாமஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
Chiyaan Vikram at Filmfare Awards
பொன்னியின் செல்வனுக்கு 5 விருதுகள்
மணிரத்னம் இயக்கிய சரித்திர படமான பொன்னியின் செல்வன் 2ம் பாகத்துக்கு 4 பிலிம்பேர் விருதுகள் கிடைத்தன.
ஆதித்த கரிகாலனாக நடித்த சீயான் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.
சின்னஞ்சிறு கிளியே பாடலை பாடிய ஹரிசரணுக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான விருது வழங்கப்பட்டது.
சிறந்த புரொடக்ஷன் டிசைன் விருது கலை இயக்குனர் தோட்டா தரணி வென்றார்.
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது ரவிவர்மனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த பாடலாசிரியர் விருது அகநக பாடலை எழுதிய இளங்கோ கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... Soft மோடில் ஜெயம் ரவி.. Rugged மோடில் சிவகார்த்திகேயன் - தீபாவளிக்கு நேருக்கு நேர் மோதும் யங் ஹீரோஸ்!
Aishwarya Rajesht at Filmfare Awards
சிறந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
மாமன்னன் படத்தில் வில்லனாக மிரட்டிய பகத் பாசிலுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான விருதை ஃபர்ஹானா படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் வென்றார்.
சிறந்த இயக்குனர் (Critics) விருது விடுதலை படத்துக்காக வெற்றிமாறனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த நடிகைக்கான விருது டாடா பட நாயகி அபர்ணா தாஸூக்கு கிடைத்தது.
Keerthy Suresh at Filmfare Awards
கீர்த்தி சுரேஷுக்கு விருது
தெலுங்கில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது தசரா பட நாயகன் நானிக்கு வழங்கப்பட்டது.
தெலுங்கில் சிறந்த நடிகைக்கான விருதை தசரா பட நாயகி கீர்த்தி சுரேஷ் தட்டிச் சென்றார்.
மலையாளத்தில் சிறந்த நடிகருக்கான விருது நண்பகல் நேரத்து மயக்கம் படத்திற்காக மம்முட்டிக்கு வழங்கப்பட்டது.
கன்னடத்தில் சிறந்த நடிகருக்கான விருதை ரக்ஷித் ஷெட்டி வென்றார்.
இதையும் படியுங்கள்... இதுவரை யாரும் பார்த்திடாத சந்தானத்தின் மனைவி... இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ!