Soft மோடில் ஜெயம் ரவி.. Rugged மோடில் சிவகார்த்திகேயன் - தீபாவளிக்கு நேருக்கு நேர் மோதும் யங் ஹீரோஸ்!
Kollywood Heroes : இவ்வாண்டு முதல் பாதியை விட, இரண்டாம் பாதியில் பெரிய அளவில் கோலிவுட் திரைப்படங்கள் வெற்றிநடை போட்டு வருகின்றது.
Manjummel boys
இந்த ஆண்டின் துவக்கம் கேரளா திரையுலகத்திற்கு சிறப்பாக அமைந்த அதே நேரம், தமிழ் திரையுலகை பொருத்தவரை, முதல் காலாண்டில் வெளியான பல திரைப்படங்கள், குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்கள் மக்களை மகிழ்விக்க தவறியது என்றே கூறலாம்.
மூன்றே நாளில்...'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இருந்து விலகியது ஏன்? சீக்ரெட்டை லீக் செய்த சத்யா சாய்!
raayan
ஆனால் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் வெளியான அரண்மனை 4 தொடங்கி ராயன் வரை பல நல்ல திரைப்படங்கள் மீண்டும் கோலிவுட் உலகின் தலையை இந்திய சினிமா அரங்கில் நிமிரச் செய்துள்ளது. குறிப்பாக நிதிலனின் "மகாராஜா" திரைப்படம் 50 நாட்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
Brother
இந்த சூழலில் எதிர்வரும் தீபாவளி திருநாளுக்கு, தற்போதைய நிலவரப்படி இரண்டு இளம் ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் நேருக்கு நேர் மோத உள்ளது. அதில் ஜெயம் ரவி மிகவும் சாப்டான நடிகராக தனது "பிரதர்" என்ற திரைப்படத்தோடு தீபாவளி ரேசில் களமிறங்கி இருக்கிறார்.
Amaran
அதே நேரம் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று Rugged லுக்கிற்கு மாறியுள்ள சிவகார்த்திகேயனின் "அமரன்" திரைப்படமும் தீபாவளி ரேசில் களமிறங்கியிருக்கிறது. இரண்டு இளம் ஹீரோக்களும் அதிக அளவிலான வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர்கள், அதே சமயம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர்கள். ஆகையால் இந்த போரில் யார் வெல்வார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதிக 1000 கோடி வசூல் படங்களை வைத்திருக்கும் சூப்பர்ஸ்டார் யார்? ஷாருக்கான், பிரபாஸ் இல்ல..