MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காமெடியில் மட்டும் அல்ல... சென்டெமெண்டாக நடித்து ரசிகர்களை அழ வைத்த வடிவேலுவின் 6 முக்கிய படங்கள்!

காமெடியில் மட்டும் அல்ல... சென்டெமெண்டாக நடித்து ரசிகர்களை அழ வைத்த வடிவேலுவின் 6 முக்கிய படங்கள்!

நடிகர் வடிவேலு, காமெடியன் என்பதை தாண்டி, சென்டிமெண்டால் ரசிகர்கள் மனதை டச் செய்த 6 படங்கள் பற்றிய தகவல்கள். 

3 Min read
Author : manimegalai a
Published : Aug 15 2023, 12:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நடிகர் வடிவேலுவை பொறுத்தவரை, காமெடியில் மட்டும் அல்ல, சென்டிமெண்டான காட்சிகள் கொடுத்தாலும்... சும்மா பின்னி பெடல் எடுத்து விடுவார். அப்படி ரசிகர்களை... கண் கலங்கி அழ வைத்த , வடிவேலுவின் 6 செண்டிமெண்ட் நிறைந்த படங்கள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
 

27

ராஜகாளியம்மன்: 

இயக்குனர் ராமநாராயணன் இயக்கத்தில், 2000 ஆண்டு பக்தி படமாக வெளியான ராஜகாளியம்மன் திரைப்படத்தில் வடிவேலு, ஒரு பாசமான அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் இவருக்கு தங்கையாக, அதாவது ஹீரோயினாக கௌசல்யாவும், ஹீரோவாக கரணும் நடித்திருப்பார்கள். ராஜகாளி அம்மன் வேடத்தில் ரம்யா கிருஷ்ணா நடித்திருப்பார். தன்னுடைய தங்கை கெட்டவனை திருமணம் செய்து கொண்டதால், இது பற்றி நியாயம் கேட்க வடிவேலு செல்லும் போது... அவரை அடித்தே கொன்று விடுவார்கள். அந்த காட்சி எப்போது தொலைக்காட்சியில் பார்த்தாலும் கண்களை கலங்க வைக்கும்.

இமயமலையில் சுதந்திர தினம் கொண்டாடி ஆச்சர்யப்பட வைத்த ரஜினிகாந்த்! வைரலாகும் தேசபக்தி புகைப்படம்!

37

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரகுமான் - வித்தியா நடிப்பில்... கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சங்கமம். பாரதம் தான் உயர்ந்தது, நாட்புறக்கலைகள் அப்படி இல்லை என என்னும் எண்ணத்தை உடைத்தெறிந்து... கலைகள் என்றாலே உயர்ந்தது தான், அதில் ஏற்ற தாழ்வுகள் இல்லை என ஒரு காதல் காட்சியுடன் இந்த படத்தை இயக்கி சொல்ல வந்த கருத்தை கச்சிதமாக கூறி இருப்பார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இந்த படத்தில்  மணிவண்ணன் இறந்த பிறகு, தன்னால் நடனமாட முடியாது என கூறும் ரகுமானிடம், மிகவும் சென்டிமெண்டாக வடிவேலு பேசும் வசனங்கள் ரசிகர்கள் கண்களை குளமாக்கும்.
 

47

பொற்காலம்: 

இயக்குனர் சேரன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு முரளி, மீனா, சங்கவி நடிப்பில் வெளியான திரைப்படம் பொற்காலம். இந்த படத்தில் வடிவேலு பாடி நடித்த ஊனம்... ஊனம் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே பல முறை திருமண பேச்சு நடந்தும், ஊமை என்கிற காரணத்தால் முரளியின் தங்கை திருமணம் நடைபெறாமல் போக, கவலையில் இருக்கும் நண்பன் முரளியிடம்... வடிவேலு, ஒரு வார்த்தை உன் நண்பன் என் கிட்ட கேட்டியா? நான் உன் தங்கச்சிய கட்டிக்க மாட்டானா என வடிவேலு பேசும் வசனம்... திரையரங்கில் பலரை கண்ணீர் விட வைத்த செண்டிமெண்ட் காட்சிகளில் ஒன்று.

Dhanush: இந்த நடிகை தான் வேண்டும்!அடம்பிடித்து தளபதி நாயகியை கமிட் செய்த தனுஷ்! வாரி வழங்கப்படுகிறதா சம்பளம்?
 

57

எம் மகன்:

இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில், பரத், கோபிகா, வடிவேலு, சரண்யா பொன்வண்ணன், நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எம் மகன். மிகவும் கண்டிஷனாகவும், கஞ்சத்தனமாகவும் இருக்கும் நாசரிடம், அடிக்கடி வடிவேலு திட்டு வாங்கும் கதாபாத்திரத்தில் நடித்தாலும், ஒரு கட்டத்தில் பரத் - கோபிகா எல்லோரையும் எதிர்த்து திருமணம் செய்து கொள்ள நேரும் போது , கண்களில் கண்ணீரோடு தன்னிடம் இருக்கும் பணத்தை கொடுத்து இவர் பேசும் சென்டிமென் வேற லெவல் அப்படியே தாய் மாமனின் பாசத்தை நேர்த்தியாக காட்டி இருக்கும்.

67

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி, தேசிய விருதை பெற்ற திரைப்படம் 'தேவர் மகன்'. சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்த இந்த படத்தில், வடிவேலு இசக்கி என்கிற ஒரு வேலைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கிளைமேக்ஸ் காட்சியில், கமல் செய்த குற்றத்திற்காக போலீசில் சரணடைய செல்லும் போது, ஐயா அருவாளை என் கிட்ட கொடுங்க நான் பழைய ஏத்துக்குட்டு ஜெயிலுக்கு போகிறேன் என, கமல் பின்னால் அழுது கொண்டே வரும் காட்சி அவ்வளவு இதில் ரசிகர்களால் மறந்து விட முடியாது. அப்படிப்பட்ட எமோஷ்னல் நிறைந்த காட்சியாக இருக்கும்.

பாக்கிய லட்சுமிக்கு மறுமணம்? பெண் கேட்க தயாரான பழனிச்சாமி அம்மா! இது தெரிஞ்சா கோபிக்கு நெஞ்சே வெடிச்சிடுமே!

77

மாமன்னன்:

சமீபத்தில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில்... வடிவேலு பல இடங்களில் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் ஸ்கோர் செய்திருந்தாலும், கோவில் கிணற்றில் குளித்ததற்காக, தன்னுடைய மகனின் 3 நண்பர்களை கிணற்றில் கல்களால் தாக்கியே கொன்ற வெறிபிடித்த மனிதர்களுக்கு எந்த ஒரு தண்டனையும் வாங்கி கொடுக்க முடியவில்லை என தனியாக நின்று, வடிவேலு அழும் காட்சி ரசிகர்கள் மனதை உருக வைத்த காட்சியாகும்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
வடிவேலு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved