அட்ஜஸ்ட்மென்ட் வேணும்னா அப்படியே ஓடி போய்டு..! திறமையால் ஜொலித்து... திருமணமாகி செட்டிலான 5 நடிகைகள்!
பல ஹீரோயின்கள் அட்ஜஸ்ட்மெட் செய்து பட வாய்ப்பை கைப்பற்றுவதற்காக... சமீப காலமாக திரையுலகில் ஒரு தகவல் தீயாக சுற்றி வரும் நிலையில், திறமையால் ஜொலித்து, திருமணம் ஆகி செட்டில் ஆன 5 நடிகைகள் குறித்து தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Nadiya
திரையுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைக்கும் நாயகிகள், அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் நிலைக்க முடியும்என்கிற கருத்து அடிபட்டு வந்தாலும், இப்படி பட்ட விஷயங்களை தகர்த்தெறிந்து தன்னுடைய திறமையால் மட்டுமே திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றிய 5 ஹீரோயின்கள் யார் யார் என்பதை பார்க்கலாம். இந்த நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் என வாயை எடுத்தாலே... அவர்கள் தெருமுனை வரை துரத்தி அடிப்பார்களாம்.
நதியா :
தமிழ் திரையுலகில் 1985 ஆம் ஆண்டு வெளியான 'பூவே பூச்சூடவா' படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அழகு நடிகை நதியா. தன்னுடைய முதல் படத்திலேயே... துரு துரு நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். தனக்கு பொருத்தமான மாடர்ன் உடையில் வலம் வந்து பல முன்னணி நடிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.மந்திரப்புன்னகை, உயிரே உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நிலவே மலரே, பூமழை பொழிகிறது, சின்னத்தம்பி பெரியதம்பி, பாடு நிலவே, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தன்னுடைய திறமையால் பட வாய்ப்பை கைப்பற்றி, பின்னர் வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் நதியா. திருமணமாகி பல வருடங்கள் கழித்து, சினிமாவிற்கு கம் பேக் கொடுத்த நதியா தொடர்ந்து பல படங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயின்களின் அம்மா வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிபிடித்தக்கது.
தேவயானி
கோலிவுட் திரையுலகில் டாப் ஹீரோயின் லிஸ்டில் இருந்தவர் நடிகை தேவயானி. அஜித், விஜய், விக்ரம், என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடத்திலும், சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். மும்பை சேர்ந்த இவர், தொட்ட சிணுங்கி படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்து அறிமுகமாகி இருந்தாலும், தன்னுடை அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியை குறைத்து, குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்தார். இவர் எப்போதுமே அட்ஜஸ்ட்மெட் பட வாய்ப்புகளுக்கு எஸ் சொல்லாத தேவயானி, பிரபல இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து, அவரையே குடும்பத்தினரை மீறி திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
மோனிகா :
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோயினாக மாறிய நடிகைகளில் முக்கியமானவர் மோனிகா. இவர் ஒருபோதும் அட்ஜஸ்ட்மென்ட் என பேச்சை எடுத்தாலே, உங்க படத்தில் நடிக்க விருப்பம் என மூஞ்சில் அடித்தது போல் கூறி விடுவாராம். இதனால் பல படங்களில் வாய்ப்பை கூட இழந்துள்ளாராம். அதே நேரம் திரைப்படங்களில் கதைக்காக கவர்ச்சி காட்டவும் தயங்காதவர் மோனிகா. இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி, இஸ்லாமிய மதத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவலட்சுமி :
நடிகை சுவலட்சுமி 1995 ஆம் ஆண்டு, இயக்குனர் வசந்த் இயக்கத்தில், மணிரத்னம் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான ஆசை திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். முதல் படம் சூப்பர் - டூப்பர் ஹிட்டடித்ததால், அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் பிஸியானார். தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து, கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த இவர், பட வாய்ப்புகள் குறைந்த பின்னர் சீரியலில் நடிக்க துவங்கினார். பின்னர் வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். சுவாலட்சுமியும் திறமையால் மட்டுமே திரையுலகில் ஜொலித்தார். அட்ஜஸ்ட்மென்டுக்கு என்றுமே இடம் விட்டது கிடையாது.
கௌசல்யா:
தமிழில் சினிமாவில் 90 களில் கலக்கி வந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்லிம் ஃபிட் அழகியான கௌசல்யா. விஜய், கார்த்தி, பிரபுதேவா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், 'காலமெல்லாம் காதல் வாழ்க' படத்தில் அறிமுகமானார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள இவர், திரையுலகில் அறிமுகமானத்தில் இருந்து... அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் பட வாய்ப்புகளை கைப்பற்றியவர். பார்க்க சைலெண்டாக இருந்தாலும்... அட்ஜஸ்ட்மென்ட் என்று யாராவது வாயை எடுத்தாலே பத்ரகாளியாக மாறி அவர்களை விரட்டி அடிப்பாராம். மேலே கூறிய 4நடிகைகள் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டாலும், கௌசல்யா 40 வயதை கடந்து விட்ட போதிலும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.