அண்ணாச்சியும்; ஆடம்பர கார்களும்! லெஜண்ட் சரவணனின் வியக்க வைக்கும் கார் கலெக்ஷன் இதோ!
தமிழ்நாட்டில் முன்னணி தொழிலதிபராகவும், கோலிவுட்டில் நடிகராகவும் வலம் வரும் லெஜண்ட் சரவணனின் கார் கலெக்ஷன் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Legend saravanan
தமிழ்நாட்டில் லெஜண்ட் என்று சொன்னால் அனைவருக்கும் முதலில் நியாபகத்துக்கு வருவது சரவணன் அருள் தான். கோடி கோடியாய் சம்பாதிக்கும் தொழிலதிபராக இருக்கும் இவருக்கு நடிப்பின் மீதும் அதீத ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக ஆரம்பத்தில் தன் கடை விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் நடித்து கவனம் ஈர்த்தது மட்டுமின்றி ஒரு டிரெண்ட் செட்டராகவும் மாறினார் சரவணன். இவரைப் பார்த்து பல முதலாளிகள் தங்கள் கடை விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினர்.
Legend saravanan Car Collection
விளம்பரத்தின் மூலம் மக்கள் மத்தியில் ரீச் ஆன லெஜண்ட் சரவணன், அடுத்ததாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அவர் தமிழ் சினிமாவில் நடித்த முதல் படம் லெஜண்ட். இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தில் ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி படு பிரம்மாண்டமாக தயாரித்தும் இருந்தார் சரவணன். லெஜண்ட் திரைப்படம் விமர்சனங்களை தாண்டி ஓடிடியில் அதிக பார்வைகளை பெற்று அசத்தியது. இதையடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் லெஜண்ட் சரவணன்.
Rolls Royce
ரோல்ஸ் ராய்ஸ்
லெஜண்ட் சரவணனுக்கு கார்கள் மீதும் அலாதி பிரியம் உண்டு. இதனால் சொகுசு கார்களை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறார். அவரிடம் விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரே மொத்தம் 3 உள்ளது. ரூ.12 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம், ரூ.8.23 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் விரைத், ரூ.7.25 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ஆகிய கார்கள் உள்ளன.
Aston Martin
அஷ்டன் மார்டின்
உலகின் புகழ்பெற்ற கார் நிறுவனமான அஷ்டன் மார்ட்டின் நிறுவன கார்களும் லெஜண்ட் சரவணனிடம் இரண்டு உள்ளது. அதில் ஒன்று அஷ்டன் மார்டின் DB11, இதன் மதிப்பு ரூ.4.44 கோடியாகும், அதேபோல் மற்றொன்று அஷ்டன் மார்டின் ரேபிட் S, இதன் மதிப்பு ரூ.3.89 கோடி ஆகும்.
இதையும் படியுங்கள்... தனுஷ் பட இயக்குனரோடு இணையும் லெஜெண்ட்.. லுக் டெஸ்ட் கூட முடிஞ்சுருச்சாம் - அதிரடி ஆக்ஷனில் சரவணன்!
Legend saravanan cars
மெர்சிடிஸ்
மெர்சிடிஸ் நிறுவன கார்கள் லெஜண்ட் சரவணனிடம் மூன்று உள்ளது. அதில் ஒன்று மெர்சிடிஸ் E63 AMG, இதன் மதிப்பு ரூ.1.79 கோடி, மற்றொன்று மெர்சிடிஸ் S63 AMG, இதன் மதிப்பு ரூ.2.86 கோடியாகும், அவரிடம் உள்ள மூன்றாவது மெர்சிடிஸ் கார் மேபேஜ் S650, இதன் மதிப்பு ரூ.3.3 கோடி ஆகும்.
Lamborgini
லம்போகினி
லம்போகினி என்கிற வெளிநாட்டு சொகுசு காரும் லெஜண்ட் சரவணனிடம் மூன்று இருக்கிறது. அதில் ஒன்று லம்போகினி அவெண்டேடர், இதன் மதிப்பு ரூ.5 கோடி, மற்றொன்று லம்போகினி ஹரிகேன், இதன் ரேட் ரூ.3.22 கோடி, மூன்றாவதாக அவர் வைத்துள்ள இந்த கம்பெனி சொகுசு காரின் பெயர் லம்போகினி உருஸ், இதன் விலை ரூ.3.15 கோடியாம்.
Bently
பென்ட்லி
பென்ட்லி நிறுவன கார்கள் லெஜண்ட் சரவணனிடம் 4 உள்ளது. அதன்படி, ரூ.7.3 கோடி மதிப்பிலான பென்ட்லி mulsanne, ரூ.4.05 கோடி மதிப்புள்ள பென்ட்லி bentayga, ரூ.4.41 கோடி விலைமதிப்புள்ள பென்ட்லி continental gt, ரூ.3.32 கோடி மதிப்பிலான பென்ட்லி flying spur போன்ற கார்கள் உள்ளன.
Porsche
போர்ஸே
லெஜண்ட் சரவணனிடம் போர்ஸே கார்கள் மட்டும் மொத்தம் 5 உள்ளது. அவை ரூ.2.33 கோடி மதிப்புள்ள porsche panamera turbo, ரூ.2.18 கோடி மதிப்புள்ள porsche panamera gts, ரூ.1.84 கோடி மதிப்புள்ள porsche 911 carrera, ரூ.3.08 கோடி மதிப்புள்ள porsche 911 turbo, ரூ.1.93 கோடி மதிப்புள்ள porsche cayenne turbo ஆகிய கார்கள் உள்ளது.
BMW
பிஎம்டபிள்யூ
லெஜண்ட் சரவணனிடம் இரண்டு பிஎம்டபிள்யூ கார்கள் உள்ளன. அதில் ஒன்று பிஎம்டபிள்யூ X6 M மாடல் கார் ஆகும். அதன் மதிப்பு ரூ.2.06 கோடி, அதேபோல் அவரிடம் உள்ள மற்றொரு பிஎம்டபிள்யூ காரின் M5 மாடலாகும். இதன் மதிப்பு ரூ. 1.63 கோடியாகும்.
இதையும் படியுங்கள்... நியூ லுக்கில் லியோ விஜய்க்கே டஃப் கொடுக்கும் லெஜண்ட் சரவணன்... அசரவைக்கும் அண்ணாச்சியின் கூல் போட்டோஸ்