திரையுலகில் 19 ஆண்டுகளை நிறைவு செய்த நயன்தாரா..! சோதனைகளும்... சாதனைகளும் ஒரு பார்வை!
நடிகை நயன்தாரா தியாரையுலகில் அறிமுகமாகி 19 வருடங்கள் ஆகும் நிலையில்... அவர் கடந்து வந்த பாதைகள், மற்றும் அவர் வாழ்க்கையில் வந்த சோதனைகளை கூட எப்படி சாதனைகளாக மாற்றினார் என்பது குறித்து இந்த இந்த தொகுப்பில் பார்ப்போம்.
நடிகை நயன்தாரா திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்னர், கேரளாவில் உள்ள ஒரு லோக்கல் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றினார். திரைப்பட வாய்ப்புகளை தேடி வந்த இவருக்கு, 'மனசினக்கரே' என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதால், மோகன் லால் நடித்த 'நாட்டுராஜாவு' போன்ற படங்களில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
மலையாள திரையுலகில் அறிமுகமான இரண்டே வருடங்களில்... தமிழ் இயக்குனர்கள், மற்றும் தயாரிப்பாளர்கள் கண்கள் இவர் மேல் விழவே... நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக 'ஐயா' படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் எதார்த்தமான நடிப்பு மற்றும் அழகு ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது. மேலும் தமிழில் இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக 'சந்திரமுகி' படத்தில் நடித்து ஒட்டு மொத்த இளம் நடிகைகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இது ஃபேமிலி டைம்... ஃபாம் ஹவுசில் குடும்பத்தோடு குதூகலம் பண்ணும் பிரகாஷ் ராஜ்! வைரலாகும் போட்டோஸ்!
அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தாலும்... கொழுக்கு மொழுக்கென இருந்த இவர் உடல் வாகு காரணமாக 'கஜினி' படத்தில் குணச்சித்திர வேடத்திலும், 'சிவகாசி' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடும் அளவிற்கு தள்ளப்பட்டார். பின்னர் யாரும் எதிர்பார்த்த தோற்றத்திற்கு மாறி ஜீவாவுக்கு ஜோடியாக 'ஈ' படத்தில் நடித்தார். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும், விமர்சனம் ரீதியாக வெற்றிபெற்றது.
சிம்புவுக்கு ஜோடியாக 'வல்லவன்' படத்தில் நடித்த போது... நிஜமாகவே அவரின் காதல் வலையில் சிக்கிய நயன், சில காலம் அவருடன் டேட்டிங் செய்தார். இருவரும் நெருக்கமாக எடுத்த புகைப்படங்கள் எப்படியோ வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது வரை இவர்களின் பிரிவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து சரியான தகவல்கள் வெளியாக வில்லை என்றாலும், காதலை பிரேக் அப் செய்த பிறகும்... நீண்ட இடைவெளிக்கு பின்னர், சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா 'இது நம்ப ஆளு' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலரின் பிறந்தநாளில்... வித்தியாசமாக காதலை அறிவித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்..! விரைவில் திருமணமா?
இந்த காதல் சர்ச்சை ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தாலும், இதற்கு இடையில் நயன் அஜித்துக்கு ஜோடியாக நடித்து மிரட்டிய 'பில்லா 2', 'யாரடி நீ மோகினி', 'சத்யம்', 'வில்லு', 'ஏகன்' போன்ற படங்கள் அடுத்தடுத்த ஹிட்... சிம்புவின் காதல் தோல்வியில் இருந்து இவரை தேற்றி கொண்டுவந்தது.
prabhu deva - nayanthara
நயன்தாராவின் வாழ்க்கையில் மிகப்பெரிய வலியை ஏற்படுத்தியது என்றால், பிரபு தேவாவுடன் ஏற்பட்ட காதல் தான். சுமார் மூன்று ஆண்டுகள் பிரபு தேவாவை உருகி உருகி காதலித்து அவரை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பதற்காக, மதம் கூட மாறியதாக கூறப்பட்டது. விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், திடீர் என காதலை முறித்து கொள்வதாக கூறிய தகவல் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காதல் முறிவுக்கு பின்னர் சரியாக படங்கள் நடிக்காதல் இருந்த நயன்தாரா... 2013 ஆம் ஆண்டு அட்லீ இயக்குனராக அறிமுகமான, 'ராஜா ராணி' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த இவர், கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்படும் 'மாயா' படத்தில் நடித்தபோது, இந்த படம்... முன்னணி ஹீரோக்கள் படங்களுக்கு நிகராக ஓடி வெற்றிபெற்றது.
எம்ஜிஆர் முதல் விஜய் வரை: ஆச்சி மனோரமாவின் அற்புதங்கள் என்னென்ன?
2015 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், 'நானும் ரவுடி தான்' படத்தில் நடித்த போது... விக்கிக்கும் , நயனுக்கு ஏற்பட்ட காதல் குறித்த தகவல் வெளியான போது... நயன்தாரா சந்தித்த விமர்சனங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஏற்கனவே இரண்டு காதல் தோல்விகளை சந்தித்த இவரின் இந்த காதல் எவ்வளவு நாட்கள் நிலைக்கும் என நெகடிவ் கமெண்ட்ஸ் வெளியான நிலையில், அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக, நயன்தாரா - விக்கி ஜோடி ஒருவழியாக இந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி உலகறிய திருமணம் செய்து கொண்டனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட 4 மாதத்தில், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ள நயன் - விக்கி ஜோடி, குழந்தை விவகாரத்திலும் சர்ச்சையில் சிக்கி மீண்டனர். தற்போது தங்களுடைய உயிர் - உலகமாகிய இரட்டை குழந்தையுடன், சந்தோஷமாக வாழ்ந்து வரும் நயன்தாரா பல்வேறு தடைகளையும், வலிகளையும் கடந்து தான் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.
நடிகை என்பதை தாண்டி, கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து, தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்தும் , விநியோகமும் செய்து வருகிறார். அதே போல் டீ நிறுவனம், காஸ்மெடிக்ஸ் போன்ற சில தொழில்களிலும் முதலீடு செய்துள்ள நயன்தாரா... ஒரு படத்திற்கு மட்டும் 4 கோடி முதல் 6 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.